சிற்றுண்டி வகைகள்

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

றா புட்டை விட மிகவும் சுவையானது இந்த மீன் புட்டு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மீன் – 500 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 7
பூண்டு – 6 பல்
சீரகம், கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மீனை சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ள வேண்டும்.

* இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டை போட்டு சிறிது வதக்கியபின் ப.மிளகாய், வெங்காயத்தைபோட்டு 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் மீன், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி!

* இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

* அதிக முள் இல்லாத எந்த மீனிலும் இந்த புட்டை செய்யலாம். சுறா புட்டை விட மிகவும் சுவையாக இருக்கும். நெத்திலி மீனில் புட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* விருப்பப்பட்டால் மிளகும் தாளிக்க பயன்படுத்தலாம். கூடுதல் சுவையாக இருக்கும்.201605091000443539 how to make fish puttu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button