மருத்துவ குறிப்பு

பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் உப்பு!!!

அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் போது, இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். ஆனால் உங்கள் பற்களை வெண்மையாக்கவும் செரிமானத்திற்கு கைகொடுக்கவும் உப்பு உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அடுத்த தடவை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருந்தை நாடி செல்லாதீர்கள்.

மாறாக சமையலறை சென்று உப்பை எடுங்கள். சிறந்த ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு உப்பை பயன்படுத்துங்கள். சரி, இப்போது எதற்கெல்லாம் உப்பு பயன்படுகிறது என்பதை பார்க்கலாமா?

வாய் அல்சர்கள்

அரை டீஸ்பூன் உப்பை எடுத்து அல்சர் ஏற்பட்டுள்ள பகுதியில் தடவவும். எச்சரிக்கையாக இருங்கள்! அது கடுமையாக கடுக்கலாம். சில நிமிடம் அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள். பின் சாதாரண நீரில் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் செய்திடவும்.

தொண்டை புண்

கரகரப்பான தொண்டையை ஆற்ற வேண்டுமானால் உப்பு தண்ணீரில் (1 டீஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட 1 கிளாஸ் தண்ணீரில்) வாயை கொப்பளிக்கவும். பல் வலி, மூக்கடிச் சதை வளர்ச்சி மற்றும் அடிநாக்குச் சதை வளர்ச்சியினால் ஏற்படும் வலிகளுக்கும் கூட இது நிவாரணம் அளிக்கும்.

செரிமானம்

செரிமாமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் போது, சிறிதளவு கல் உப்பு மற்றும் புதினா இலை சேர்க்கப்பட்ட லஸ்ஸியை குடியுங்கள்.

உடல் ஸ்க்ரப்

1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் 5 டீஸ்பூன் உப்புத் தூளை கலந்து கொள்ளவும். அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, அந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளித்திடவும்.

பொடுகு

1-2 டீஸ்பூன் உப்பை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் போடவும். ஈரமான விரல் நுனிகளை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இப்போது உங்கள் முடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு அலசுங்கள். இதனை மாதம் ஒரு முறை பின்பற்றினால், பொடுகு நீங்கி, முடி பொழிவடையும்.

தீக்காயங்கள்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உப்பை போட்டு, 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் நீரில் அதனை கழுவிடுங்கள்.

தசைப்பிடிப்பு

1 லிட்டர் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இதனை சீரான இடைவேளையில் குடித்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும்.

வீக்கமடைந்த பாதங்கள்

ஒரு கை உப்பை சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு துணியில் போட்டு கட்டவும். இந்த உப்பு மூட்டையை பாதங்களின் மீது 20 நிமிடங்களுக்கு தடவவும். (இந்த மூட்டையை மீண்டும் சுட வைத்து பயன்படுத்தலாம்).

கீல்வாத வலி

வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும். வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும்.

உள்ளுக்குள் வளரும் நகங்கள்

ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்படி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் காய விடுங்கள். இப்போது நக வெட்டியை கொண்டு அந்த நகங்களை வெட்டி எறியுங்கள்.

கண்கட்டி

2 டீஸ்பூன் உப்பை ஒரு சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு மென்மையான துணியில் போட்டு மூட்டு கட்டவும். இதனை கண்கட்டியின் மீது தடவவும். இதே போல் உப்பு தண்ணீரை கண்களின் மீது தெளித்தாலும் நல்ல பலனை தரும்.

காய்ச்சல்

உப்பு கலந்துள்ள குளிர்ந்த நீரில் மென்மையான துணி ஒன்றை முக்கிடவும். இந்த துணியை உங்கள் நெற்றில் விரித்து வைத்தால், காய்ச்சலை எதிர்த்து அது போராடும். உடனடி நிவாரணத்திற்கு இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

நகத்தை பளிச்சிட வைக்க

உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு உங்கள் நகங்களின் மீது மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மென்மையான மற்றும் வெண்மையான நகங்களை பெற இதனை வாரம் ஒரு முறை செய்திடவும்.

13 1434190614 1mouthulcer

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button