அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்

ld550நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
கடலைப்பருப்பு
கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலை மாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக  சந்தர்ப்பங்களில் கை கொடுக்கக் கூடியது இந்த கடலை மாவு தான்.
இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் கருதப்படுகிறது. எளிய, செலவில்லாத முகத்திற்குப் போடக் கூடிய பேக்,  கடலை மாவுதான். இது தோலை இறுக்கச் செய்யும். இறந்த செல்களை அகற்றக்கூடியது. நல்ல நிறமாக வர வேண்டுமென்பவர்கள் கடலை மாவை  உபயோகித்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.
கடலை மாவு ஒரு சிலருக்கு அலர்ஜியாவதுண்டு. அவர்கள் கடலை மாவுடன், பன்னீர், தேன், பால் தயிர், இவைகளில் ஏதாவது ஒன்றை சிறிதளவு அலந்து முகத்தில் பேக்காகப் போடலாம். (அவரவர் சரும வகைக்குத் தகுந்த மாதிரி ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்)
பச்சைப் பயறு
பொதுவாகவே எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தக் கூடிய தானிய வகை பச்சைப் பயறு. இது பித்தத்தைப் போக்கக் கூடியது. புரதச் சத்து  அதிகமாக இருக்கும். இதில் ஒட்டும் தன்மை (பசைத் தன்மை) அதிகம்.
நமது சருமம் புரதத்தால் ஆனது. உணவாகச் சாப்பிடும் போதும் புரதம் நமக்குத் தேவையான ஒன்று. அதே சமயம் புரதத்தை வெளிப் புறத்தில்  கொடுக்கும் பொழுது, சருமம் மென்மையாக மாறுகிறது. முளை கட்டின பச்சைப் பயறில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
பயத்தம் மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து சருமத்திற்குச் பூச உபயோகப்படுத்தலாம். அல்லது வெள்ளரிச்சாற்றை பயத்ம் மாவுடன் கலந்து  பேக்காகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது சிலருக்கு சிகைக்காய் தேயத்துக் குளிப்பது, அலர்ஜியாக இருக்கும். கண் எரிச்சலைக் கொடுக்கும். அவர்களும்  சரி, சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் குளியலின் போது சரி பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.
உலர்ந்த சரும வகைக்கு பால் ஏடுடன் பயத்தம் மாவையும், எண்ணெய் சருமத்திற்கு பயத்தம் மாவுடன் ஆரஞ்சு சாற்றையும் கலந்து  உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர வெள்ளரிச்சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்ப்பது சருமத்திற்கு எந்தவித தீங்கும்

செய்யாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button