பொதுவானகைவினை

ஒயர் கலைப்பொருட்கள்

பிளாஸ்டிக் ஒயரில் கூடைகள் பின்னுவதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். கூடை உபயோகிக்கிற பழக்கம் இடையில் சில காலத்துக்கு மறைந்திருந்தது. இப்போது மீண்டும் ஒயர்கூடையின் உபயோகம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஒயரில் புதுப் புது டிசைன்களில் கூடைகள் பின்னுகிறார் அனுராதா சுந்தரபாண்டியன். அதே ஒயரை கொண்டு சாமி உருவங்களுக்கான மாலைகள், திருமண வரவேற்புக்கான மாலைகள், பொக்கே, பூக்கூடை, தட்டுகள் என வேறு சில கலைப் பொருட்களையும் செய்கிறார்!

இன்னிக்கு என்னென்னவோ மெட்டீரியல்ல பைகள் வருது. எதுவுமே அந்தக் காலத்து ஒயர்கூடைகள் அளவுக்கு உழைக்கிறதில்லை. இடையில சில வருஷங்கள் காணாமப் போயிருந்த ஒயர் கூடைகள் இப்ப மறுபடி உபயோகத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு. அதுலயே நிறைய புது டிசைன்ஸ் பின்னல்கள் இப்போ வந்திருக்கு. முன்னெல்லாம் ஒயர்ல சின்னச் சின்ன உருவங்கள் மட்டும் பண்ணிட்டிருப்போம்.

இப்போ சாமிப் படங்களுக்கான சின்ன சைஸ் மாலை முதல் கல்யாண ரிசப்ஷனுக்கான பெரிய சைஸ் மாலை வரைக்கும் பண்றோம். பொக்கேவுக்கான பேஸ் பண்ணிட்டு, அதுக்குள்ள செயற்கைப் பூக்கள் வச்சுக் கொடுக்கலாம். விதம் விதமான தட்டுகள் பண்ணலாம். அடிப்படை பின்னல் தெரிஞ்சிட்டா, அதை வச்சு நம்ம கற்பனைக்கேத்தபடி என்ன டிசைன் வேணாலும் உருவாக்கலாம்” என்கிற அனுராதா, இதற்கான முதலீடாக வெறும் 100 ரூபாய் போதும் என நம்பிக்கையும் தருகிறார்.

ஒரு பண்டில் ஒயர் 35 ரூபாய்க்கு கிடைக்கும். அதை வச்சு ரெண்டு அயிட்டங்கள் பண்ணலாம். எந்தப் பொருளா இருந்தாலும் 2 மடங்கு லாபம் கிடைக்கும். வீட்டு உபயோகத்துக்கான எல்லா பொருட்களையும் இதுல பண்ண முடியும். அன்பளிப்பா கொடுக்கலாம். அழுக்கானா தண்ணியில அலசிக் காய வச்சா புதுசு போல மாறிடும்…” என்கிறவரிடம் 3 நாள் பயிற்சியில் 5 வகையான ஒயர் கலைப் பொருட்களைக் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 750 ரூபாய்.ld4021

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button