30.6 C
Chennai
Saturday, May 18, 2024
XN50mC4
சிற்றுண்டி வகைகள்

மிரியாலு பப்பு

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 10 பல்,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

மல்லி – 3 டேபிள் ஸ்பூன்,
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்,
பச்சரிசி – 1 டீஸ்பூன்.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.
எப்படி செய்வது?

புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கிளறி, புளிச்சாறை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 25 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். மற்றொரு அடுப்பில், சிறு கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிரியாலு பப்பு ரெடி.XN50mC4

Related posts

டிரை ஃப்ரூட் தோசை

nathan

காளான் கபாப்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

அதிரசம்

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

வரகு பொங்கல்

nathan

சூடான மசாலா வடை

nathan

பசியைத் தூண்டும் சீரக துவையல்

nathan

இந்த பனீர் பாப்கார்னை செய்து பாருங்கள்.

nathan