ஆரோக்கியம் குறிப்புகள்

இரவு உணவருந்திய பிறகு சிறிது நேரம் நடப்பதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

நமது முன்னோர்கள் இரவு நேர உணவை ஏழு மணியளவில் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தனர். ஏனெனில், இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உணவருந்துவது தான் சரியான முறை என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

இதன் மூலம் அவர்கள் உணவருந்திய பிறகு சிறு சிறு வேலைகள் மற்றும் நடைப்பயிற்சி செய்துவிட்டு உறங்க செல்வதை தங்களது அன்றாட பழக்கத்தில் ஒன்றாக கடைப்பிடித்து வந்தனர்.

சரி ஏன் உணவருந்திய பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது என்ன அவ்வளவு அவசியமா என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், அதற்கான பதில்களை ஸ்லைடுகளில் காணவும்….

செரிமானம்

பெரும்பாலும் காலை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு நாம், நமது அன்றாட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம் ஆகையால் செரிமானம் எந்த சிக்கலும் இன்றி நடந்து வரும். ஆனால், இரவு உணவருந்திய பிறகு நாம் செய்வதற்கான எந்த வேலைகளும் இருக்காது, ஆகையால், செரிமானம் சீராக இருப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக நடைப்பயிற்சி அமைகிறது.

நல்ல உறக்கம்

சின்ன சின்ன வேலைகள் அல்லது நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு உறங்க சென்றால், உங்களுக்கு நல்ல உறக்கம் வரும்.

வளர்சிதை மாற்றம்

இரவு உணவருந்திய பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வதால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க உதவும்.

இரத்த சர்க்கரை அளவு

இரவு சாப்பிட்ட உடனே உறங்கினால் தானாக இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதை தவிர்க்க நீங்கள் கட்டாயம் இரவு உணவருந்திய பிறகு 10 நிமிடமாவது நடந்து வருவது அவசியம்.

இலகுவாக உணர உதவும்

சாப்பிட்ட உடனே உறங்க சென்றால் கண்டிப்பாக அசௌகரியமான உணர்வு இருக்கும். அதை தவிர்த்து, உடல் இலகுவாக உணர இந்த சிறிது நேர நடைப்பயிற்சி உதவும்.

உடல் எடையை காக்க

இரவு சாப்பிட்ட உடன் உறங்கினால் கலோரிகள் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவே, சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க முடியும்.

இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்

இரவு உணவருந்திய பிறகு சிறிது நேரம் நடந்து வருவதால் இரத்த ஓட்டம் சீராகும். இது இதய நலனிற்கு மிகவும் நல்லது.
24 1435142237 6benefitsofgoingforawalkpostdinner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button