மருத்துவ குறிப்பு

ஸ்தன ரோகம் – பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்

ஸ்தன ரோகம் – பெண்ணின் மார்பக நோய் நிதானம் & சிகிட்சைகள்

ஸ்தன ரோகம்

பாலுடன் சேர்ந்தும் அல்லது பாலுடன் சேராமலும், ஸ்திரீ யின் ஸ்தனத்தில் வாதாதிதோஷங்கள் பிரகோபித்து மாமிசரசத்தை சேர்த்து வாதபித்த சிலேத்திம ஆகந்துக சந்நிபாதாத்துமகரோகங்களை உண்டாக்கும். அவைகளின் லக்ஷணங்கள் ரத்தவித்தி ரதி தவிர மற்ற வெளிவித்திரதிகலில் சொல்லிய லக்ஷணங்களையே ஒத்திருக்கு மென்றறியவும்.

ஸ்தன ரோக சிகிச்சை :- ஆற்றுதும்மட்டிவேரை அரைத்து லேபனஞ்செய்தாலும், காட்டுபருத்தி, கசப்புசுரைவேர் இவைகளை கோதுமை கஞ்சிகத்தில் அரைத்து லேபனம் செய்தாலும், ஸ்தனங்களில் உண்டான பீடைகள் நீங்கும்.

ஸ்தன்னியவாதரோக சிகிச்சை :- வாத வியாதியினால் ஸ்தனங்கள் துஷ்டமானால் தசமூலகியாழம் மூன்று நாள் குடித்தாலும் அல்லது வாதஹரமான கிருதத்தை குடித்தாலும் அல்லது இலகுவான விரேசனம் அருந்தினாலும் வாதஸ்தனரோகம் நிவர்த்தியாகும்.

ஸ்தனங்களில் உண்டாகும் வீக்கங்களுக்கு சிகிச்சை :- வாத பித்த சிலேத்துமாதிகளினால் ஸ்திரீக்கு ஸ்தனங்களில் வீக்கமுண்டாகி அது பழுக்காமல் எரிவந்தத்துடன் இரணத்தையுண்டாக்கினால் வித்திர தியில் சொல்லிய நானாவித சிகிச்சைகள் செய்ய வேண்டியது.

ஸ்தனங்கள் கெட்டியாவதற்கு சிகிச்சை :- அருநெல்லி, கற்கத்தில் எளெண்ணெய் விட்டு தைவபக்குவமாக காய்ச்சி அதில் பருத்தியை நனைத்து ஸ்தனங்கள் மீது வைத்து கட்டினால் அது கெட்டிபடும்.

சிற்றாமுட்டியை ஜலத்துடன் அரைத்து ஸ்தனங்களுக்கு லேபனஞ்செய்து தேய்த்தால் புஷ்டியாகி கடினமாகும்.

தாமரைக்காயை பாலில் அரைத்து சர்க்கரை கலந்து ஒரு மாதகாலம் சாப்பிட்டு வந்தால் ஸ்தனங்கள் கெட்டிபடும்.

வாதாதிகளினால் துஷிதமான முலைப்பாலின் லக்ஷணம் :-
முலைப்பால் துவர்ப்பாயும் ஜலத்திலிட்டால் மிதந்து கொண்டிருக் கும் படியானதாயும் இருந்தால் வாததோஷமென்றும், காரமாயும் உப்பாயும், புளிப்பாயும் அதன் மீது மஞ்சள் சாயல் உண்டானால் அது பித்த தோஷமென்றும், பளுவாயும் பிசினியைப்போல் பிசுபிசுப்பாயும், ஜலத்தில் போட்டால் அது முழுகினால் அது கப தோஷ மென்றும், மேற்கூறிய லக்ஷணங்களும் தென்பட்டால் அது சந்நிபாத ரோகமென்றும் அறியவேண்டியது.
சாப்பிட்டாலும் அல்லது அசோக புஷ்பங்களை அரைத்து ஸ்தனங்களுக்கும் சிசுவின் பற்கள் உதடு இவைகளுக்கு லேபனஞ் செய்தால் இலக்ஷண வாந்தியாகி ஸ்தனதோஷத்தினால் உண்டாகிய வியாதிகளும் நிவர்த்தியாகும்.

தொந்ததோஷமுலைப்பாலுக்கு சிகிச்சை :- இரண்டு தோஷங்களினால் முலைப்பால் கஷ்டமானால் மேற்கூறிய சிகிச்சைகளையே தொந்தித்துச் செய்யவேண்டியது.

திரிதோஷமுலைப்பாலுக்கு சிகிச்சை :-திரிதோஷங்களினால் முலைப்பால் கஷ்டமாகி அப்பாலை சிசு குடித்தால் ஜலத்தைப்போல ஆமத்துடன் கலந்து அநேக வர்ணத்துடன் கொஞ்சம் கெட்டியாயும் அதாவது குழம்பு போலும் வயிறு நொந்து நொந்து மலம் போகும். இதற்கு முற்கூறிய சிகிச்சைகளையே செய்ய வேண்டும்.

சகலஸ்தனதோஷங்களுக்கும் சிகிச்சை :- பெரும்கடம்பை, சீமைநிலவேம்பு, தேவதாரு, சுக்கு, வெட்பாலைவிரை, நன்னாரிவேர், கிரந்திதகரம், கடுகுரோகணி இவைகளை முறைப்படி கியாழம்
வைத்து குடித்தால் சகலஸ்தனதோஷங்களும் நிவர்த்தியாகும்.

முலைபாலைப்பெருக்கசிகிச்சை :- நிலப்பூசணிவேரைப்பால் விட்டரைத்து பாலில் கலந்து அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டல் பால் விருத்தியாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கை பால் விட்டரைத்து குடித்தாலும் அல்லது கொஞ்சம் உஷ்ணமான பாலில் திப்பிலி சூரணத்தைப் போட்டு குடித்தாலும் பால் விருத்தியாகும்.

காட்டுபருத்திவேர், கரும்புவேர் இவைகளை காஞ்சிகத்தில் அரைத்து குடித்தாலும் அல்லது நிலப்பூசனி சூரணத்தை கள்ளில் அரைத்து சாப்பிட்டாலும் முலைப்பால் விருத்தியாகும்.

காட்டுபருத்திவேர், கரும்புவேர் அல்லது பற்பாடகம், நிலப்பூசனிவேர் இவைகளை கல்விட்டு அரைத்து குடித்தால் பால்விருத்தி யாகும்.

கோதுமை மாவுடன் அக்ரோட்டுபருப்பு அல்லது இலைசேர்த்து அடைசுட்டு சாப்பிட பால் பெருகும்.

ஆமணக்கு இலையை ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஸ்தனங்களின் மேல் வைத்துக்கட்ட பால் சுறப்புண்டாகும்1461319365 9745

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button