32.8 C
Chennai
Sunday, May 19, 2024
andhra chicken curry recipe 21 1463826798
அசைவ வகைகள்

ஆந்திரா சிக்கன் குழம்பு

விடுமுறை நாட்களில் அதுவும் மேக மூட்டமாக இருக்கும் நேரத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட ஆசையாக இருக்கும். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி ஏதாவது சமைத்து சப்பிட விருப்பம் இருந்தால், ஆந்திரா சிக்கன் குழம்பை செய்து சுவையுங்கள்.

இங்கு ஆந்திரா சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சோம்பு – 2 டீஸ்பூன் பட்டை – 2 துண்டுகள் சீரகம் – 1 டீஸ்பூன் ஏலக்காய் – 4 கிராம்பு – 4 பிரியாணி இலை – 1 வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – நறுக்கியது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அத்துடன் அனைத்து மசாலா பொடிகளையும், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், 30-35 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அத்துடன் கரம் மசாலா மற்றும் வெண்ணெய் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், ஆந்திரா சிக்கன் குழம்பு ரெடி!!!andhra chicken curry recipe 21 1463826798

Related posts

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

காரசாரமான இறால் மசாலா

nathan

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan

தயிர் சிக்கன்

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan