எடை குறைய

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் weight loss tips in tamil

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்
தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி(தனியா) – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது
சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
கொத்தமல்லி தழை

செய்முறை :

* கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக நசுக்கி கொள்ளவும்.

* வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி (தனியா), சீரகம், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின் அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சத்தான கொள்ளு மிளகு ரசம் ரெடி.

* இந்த ரசத்தை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரசத்தை அடிக்க வைத்து குடிக்கலாம்.201605251135449153 how to make kollu milagu rasam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button