ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

காய்கறிகள் மற்றும் பழச்சாற்றின் மூலம் நமது தோலை பள‌பள‌ப்பாக்கும் வழிகள்:

Beauty-Benefits-Of-Papayaநீங்கள் எந்த அழகு சாதனப்பொருட்களை உங்கள் முகத்திற்கு உபயோகிக்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும். நீங்கள் பழங்கள் மற்றும் சாலடுகள் சாப்பிட்டு சலித்துவிட்டது என்றால், நிபுணர்களின் கூற்றுப்படி சில ஆரோக்கியமான பழச்சாறுகள் ந‌மது தோலை ஒளிர வைக்கும் ஆற்றல் கொண்டது…

– கேரட் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது மற்றும் இதில் “விட்டமின் எ” உள்ளது. அதுபோல் கேரட் சாறு நமது சருமத்திற்கு மிகவும் நல்ல பலனைத் தரும். இது சூரியன் ஒளியால் ஏற்படும் சேதங்களான‌ சுருக்கங்கள், புள்ளிகள் மற்றும் முகப்பரு, பருக்கள், போன்றவற்றை தவிர்க்க உதவும்.
– ஆப்பிள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் உபயோகிக்கும் பொழுது, உங்கள் தோலுக்கு இள‌ வயதில் வரக்கூடிய சுருக்கங்கள் மற்றும் நமது தோல் சேதமடைவதில் இருந்தும் கட்டாயம் பாதுகாக்கும், மற்றும் தோலில் உள்ள‌ திசுவையும் இது பாதுகாக்கிறது என‌ உறுதிபட‌ கூறகின்றனர்.

– ஆரஞ்சு சாறு ஒளிரும் தோலையும் மற்றும் முகத்திற்கு சமமான நிறத்தையும் கொடுக்கின்றது.
– பப்பாளி சாற்றில் காணப்படும் ஒரு விதமான பாப்பியன் என்னும் பொருள் அவற்றை பயன்படுத்தும் போது பல்வேறு வகையான தோல் பிரச்சனையை குணப்படுத்தும் ஆற்றலை தருகிறது.
– கற்றாழையில் மிகவும் அதிகமான நன்மைகள் உள்ளது, இது சாப்பிடுவதற்கு ருசியாக இல்லை என்றாலும் அவற்றை முகத்திற்கு பயன்படுத்தும் போது மிகவும் நல்ல பலனை தருகிறது. இதில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் பல நிரம்பியுள்ளது, கற்றாழையால் தோல் நெகிழ்ச்சி, பளபளப்பு போன்றவை பராமரிக்கப்படுகிறது.

– தக்காளி சாற்றில் உள்ள‌ லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் சுருக்கங்களை தடுப்பது மட்டுமல்லாமல் நமது தோலிற்கு சமமான நிறத்தையும் தருகிறது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button