26.7 C
Chennai
Wednesday, Feb 5, 2025
201605260821288013 Foods to give for children brain development SECVPF
ஆரோக்கிய உணவு

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா!!!

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

மீன்களில் அதிகமாக கொழுப்பு உள்ள மீன் என்றால் அது சமன் மீன் தான். இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.

மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.201605260821288013 Foods to give for children brain development SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க…எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்…!!

nathan

மொறு மொறு பால்கோவா மோதகம்

nathan

கலப்பட சர்க்கரையை கண்டுப்பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

தெரிஞ்சிக்கங்க… வைட்டமின் Vs புரோட்டீன் – இவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன?

nathan

ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்பு சாப்பிடுவதால் நம் உடலுக்குள் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?

nathan

காய்ச்சல் உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan