தலைமுடி சிகிச்சை

இளநரையை போக்கும் சீயக்காய்

சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீயக்காய், வெந்தயம், பச்சை பயறு, காயவைத்த எலுமிச்சம் பழம் தோல், கறிவேப்பிலை. ஒரு கிலோ சீயக்காய் பொடி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயம், பச்சைபயறு, எலுமிச்சை தோல், கறிவேப்பிலை தலா 50 கிராம் எடுத்து பொடியாக்கி சேர்க்கவும். இந்த பொடியுடன் சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் பயன்படுத்தலாம். சீயக்காய் பவுடரில் வெந்நீர் சேர்த்து பசையாக்கி கொள்ளவும்.

இதை தலையில் சேர்த்து குளித்துவர தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். இளநரை சரியாகும். சீயக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும். ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி வெளுப்பாக வாய்ப்புள்ளதால் சீயக்காய் பொடியை பயன்படுத்துவது நல்லது.கூந்தலை கருமையாக, இளமையாக, பாதுகாப்பாக இருப்பதற்கான மசாஜ் ஆயில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம், எலுமிச்சை. பாதாமை பொடியாக்கி ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலக்கவும். இதை தலையில் வைத்து மசாஜ் செய்து சுமார் 20 நிமிடத்துக்கு பின்னர் சீயக்காய் தேய்து குளித்தால் கூந்தல் கருமையாக இருக்கும்.

வேப்பிலையை பயன்படுத்தி பேன்களை விரட்டும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை, கடுக்காய், வசம்பு, தேங்காய் எண்ணெய். 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், வேப்பிலை பசை 2 ஸ்பூன், அரை ஸ்பூன் வசம்பு பொடி, சிறிது கடுக்காய் பொடி சேர்த்து சூடுபடுத்த வேண்டும். தைலப்பதத்தில் காய்ச்சி தலைக்கு குளித்துவர பேன் தொல்லை இருக்காது.

பேன் வராமல் தடுக்கலாம். முடி உதிர்வதற்கு பொடுகு முக்கிய காரணமாக உள்ளது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் சொரியாசிஸ்சாக மாற வாய்ப்பு உள்ளது. பொடுகை போக்கும் மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், மிளகுப் பொடி, கசகசா பொடி, சீரகப் பொடி, சோத்துக் கற்றாழை.
7OWnHwN
சிறிது தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை சாறு, அரை ஸ்பூன் கசகசா, கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வாரம் இருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பொடுகு பிரச்னை தீரும். பேன் தொல்லை இருப்பவர்கள் வாரம் ஒரு முறையும், பேன் வராமல் தடுக்கும் வகையில் மாதம் ஒரு முறையும் இதை பயன்படுத்தலம். சீயக்காய் போன்ற இயற்கையானதை பயன்படுத்துவதால் தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button