தலைமுடி சிகிச்சை

இளநரை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்

இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது. முடிஉதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது.

இளநரை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்
வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மையாக கையாள வேண்டும்.

இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது. முடிஉதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்.

* நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம். படிப்படியான இளநரை மாறுவதை காணலாம்.

* நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச்சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

* சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

* முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.201605300805305166 gray hair control Natural Medicine Tips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button