தலைமுடி சிகிச்சை

பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்!

பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்
பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்

கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

dandraff

ஹீனா மற்றும் தயிரையும் கலந்து தலையில் தேய்த்து பின்பு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சிலடிப்ஸ்…

*மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".

*வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல்உஷ்ணம் குறைவதுடன் பொடுகுதொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய்_தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து துளசி images?q=tbn:ANd9GcRyGVJJWkAUrEUROj5B Ilb 6q0NZlPirPqquIr0Sf5QSMyEFBOXQஆகியவற்றை நைசாக அரைத்து தலையில்தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும்.

*வசம்பை நன்குபவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில்தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துபோகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர்கலந்து குளித்தால், பொடுகுநீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவுகலந்து தலையில்தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் images?q=tbn:ANd9GcTvJ0IUPlDu6 pEKERB4nCgCWLOy 9dABS XID8mdg v0mJndpuigஎலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைசேர்த்து காய்ச்சி, தலையில்தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

*தேங்காய்பால் எடுத்தபின் கையை தலையில் நன்றாகதேய்த்து, சிறிதுநேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.

*முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை தலையில்தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

* முட்டை தயிர், எலுமிச்சைசாறு கலந்து தலையில்தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button