மருத்துவ குறிப்பு

தாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா? இதோ சில டிப்ஸ்…

கழுத்துவலி என்பது யாருக்கும் வரலாம்.சிறுவர்களுக்கு அதிக புத்தங்கங்கள் தூக்குவதனால், சரியான முறையில் உட்காராமல், குனிந்தபடியே படிப்பதனால் கழுத்து வலி ஏற்படும்.

பெரியவர்களுக்கு கழுத்துவலி நிறைய காரணங்கள் உள்ளது.அப்படி வந்தால் அதனை பெரிது படுத்துவதில்லை. ஏதாவது வலியை போக்கும் நிவாரணியை எடுத்து தடவுகிறார்கள்.கழுத்து வலி எதனால் வருகிறது எனப் பார்ப்போம்.

2 17 1463471388

சர்வைகல் டிஸ்க் :

நம் உடலில் மிக முக்கிய நரம்பு மையங்கள் கழுத்தில்தான் அமைந்துள்ளது. முதுகுத் தண்டுவட எலும்புகளும் இந்த பகுதியில்தான் தொடங்குங்கின்றன. கழுத்து எலும்பின் மத்தியில் உள்ள சவ்விற்கு பெயர்தான் சர்வைகல் டிஸ்க்.

அதலிருந்துதான் உடலிற்கு எல்லா நரம்புகளும் செல்கின்றன. கழுத்திற்கு அதிகமான வேலை தரும்போது, அங்கிருக்கும் தசைகள் சோர்வுற்று சவ்வினை அழுத்தும். அதன் காரணமாக அந்த சவ்வு விலகுவதால் உண்டாவது பிரச்சனைக்கு பெயர்தான் சர்வைகல் ஸ்பான்டைலிட்டிஸ்.
cover 17 1463471450
யாருக்கெல்லாம் வரும் : பொதுவாக நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பாகவேஅமர்ந்தால், சரியான தலையணை வைத்து படுக்காமல் இருப்பவர்களுக்கு வரும். தூங்கும்போது கைகளை தலைக்கு முட்டு கொடுத்து தூங்கினால் கைகளில் ரத்த ஓட்டம் பாதித்து, அதனால் கழுத்திலுள்ள சவ்விற்கும் தடங்கல் தரும்.

இதனால் ஏற்படும் வலி மெல்ல கழுத்தில் வலி ஆரம்பித்து பின் கை கால் என பரவி, அசாத்திய வலி தரும். அன்றாட வேலை செய்ய இயலாமல் நிறைய பேர் அவதிபடுவதுண்டு.

இதனை சில உடற்பயிற்சி மூலமாகவும், சரியான சிகிச்சையினாலும் குணப்படுத்தலாம். வீட்டில்யேயே ஸ்பைனல் டிஸ்க்கை எவ்வாறு பாதுகாத்து வலியினைப் போக்கலாம் என்பதை பார்க்கலாம்

சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம் :

இந்த இரண்டு ஒத்தடங்களுமே தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இறுக்கத்தைப் போக்கி, நரம்புகளை ரிலாக்ஸாக வைக்கும். தினமும் காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் ஒத்தடம் வைப்பது நல்ல நிவாரணம் தரும்

பூண்டு :

பூண்டினை தினமும் வாணிலியில் வதக்கி சாப்பிட்டு வந்தால், கழுத்தில் ஏற்படும் வீக்கம் குறைந்து, எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

உடற்பயிற்சி :

இந்த ஸ்பாண்டிலைட்டிஸ் வலிக்கு சிறந்த தீர்வு கழுத்திற்கான உடற்பயிற்சிதான். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்பவர்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் முறை :

தோள்பட்டையை மேலே உயர்த்தி,மூச்சை நன்றாக இழுங்கள். ஒரு 10 நொடிகளுக்கு தம் பிடித்து ,தோள்பட்டையை உடனடியாக தொங்கவிடுவது போல் தளர்த்துங்கள். இவ்வாறு ஒரு 5 முறை செய்யுங்கள்.

இவ்வாறு தினமும் செய்வதனால் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து வலி நாளடைவில் குறையும்.இது போல் உங்கள் மருத்துவரை அணுகி உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

எப்ஸம் உப்பு :

எப்ஸம் உப்பினை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் குளிக்கலாம். இது வலியை போக்கி கழுத்திற்கு இதம் தரும்.

வேப்பிலை : வேப்பிலை வலியை போக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வேப்பிலைப் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதில் குளிக்கலாம். வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கழுத்தில் பத்து போட்டாலும் வலிக்கு இதமாக இருக்கும்.

இஞ்சி :

இஞ்சியை அதிகமாக உணவில் சேர்துக் கொள்ளுங்கள். இது சிறந்த வலி நிவாரணி.தசைகளுக்கு வலு சேர்க்கும் உணவுகளை சாப்பிடும்போது, தசைகள் உறுதி பெற்று வலி குறையும்.

நல்லெண்ணெய் :

நல்லெண்ணெயில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்லெண்ணெயை சூடுபடுத்தி வலியுள்ள பகுதியில் தேயுங்கள். அப்படியே அரை மணி நேரம் விட்டுவிடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், வலி குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் சிறந்த வலி நிவாரணி. இதனை நீரில் கலந்து குடித்து வர நாளடைவில் வலியுள்ள பகுதியில் செயல் புரிந்து குணமளிக்கும்

4 17 1463471399

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button