28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

600x400xHome-Beauty-Tips-For-Fair-Skin-600x400.jpg.pagespeed.ic.29EvM6HFEtsGB7ye3BTfஃ இறைவனது சிருஸ்டியில் அழகற்றதென எதுவுமே இல்லை. சிறப்பான இறைவனது சிருஸ்டியான உயிர்கள் ஒவ்வொன்றும் அழகானவை . குறிப்பாக பெண்கள் ஒன்றுதிரண்ட அழகின் உருவங்கள். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமான எழில் தோற்றத்தை அமைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தி, ‘ நானும் அழகே ‘ நிமிர்ந்து நில்லுங்கள்!

ஃ தன்னம்பிக்கைதான் மனிதர்களின் முதல் அழகு. ‘ நான் நிச்சயம் அழகாக இருக்கிறேன் ‘ உங்களிடம் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தன்னம்பிக்கை உங்களை விட்டு அகலாதவரை, உங்கள் அழகுக்கு குறைவேதும் ஏற்பாடாது.

ஃ உங்களுடைய அழகைப் பற்றி மறந்துகூட பிறருடைய அபிப்பிராயத்தை & குறிப்பாக பெண்களின் கருத்தை வாய்விட்டு கேட்காதீர்கள். அந்த வினாவுக்குக் கிடைக்கக் கூடிய பதில் சில சமயம் உங்கள் மனத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடும். பலவீனமான மனம் அழகு இயல்பை நிலைகுலைய செய்துவிடும்.

beauty 1ஃ பெண்களின் உடல் உறுப்புகளை , அவரவர்கள் உடல் வாகுக்கு ஏற்றாவாறு கடவுள் அமைத்திருக்கிறார். அகன்ற கண்கள் சில பெண்களுக்குதான் அழகாக இருக்கும், குறுகிய உள்ளடங்கிய குறுகிய கண்கள்தான் சிலருக்கு அழகு சேர்க்கும், சிலருக்கு எடுப்பான நாசியும் சிலருக்கு அடங்கிய மூக்கும் அழகின் சின்னங்களாக அமையக்கூடும். உயரமான சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குள்ளமான பெண்களில் கட்டழகிகள் கிடையாதா! உங்களுக்கு அமைந்திருக்கும் உடல்வாகு உண்மையில் உங்களுக்கு அழகினைத்தான் உண்டாக்குகிறது என்ற உண்மையை உணருங்கள்.

ஃ கவர்ச்சியான உடல் தோற்றம் அழகின் ஓர் அம்சம் என்பது சரி. அப்படிபட்ட உடல் கவர்ச்சி உங்களிடம் இல்லையே என்பதனாலேயே நீங்கள் அழகியல்ல என்ற முடிவுக்கு வரவேண்டாம். இனிய குரல் அழகின் ஓர் அம்சம் . உங்கள் குரல் அழகே பிறரை கவர்ந்திருக்கும் ஆற்றல் பெற்றிருக்கும்.உங்களிடம் குரல் வளம் அமைந்திருந்தால் அதைச் செம்மைபடுத்த முயலுங்கள். முறையான இசைப்பயிற்சியால் உங்கள் குரலில் பல்லாயிரக்கணக்கான மக்களை மயக்கச் செய்துவிடும்.

ஃ பகட்டான மேனியழகு இல்லாத பல பெண்கள் கட்டான உடல் அமைந்திருக்கும் . இந்த உடற்கட்டும் ஓர் அழகு என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் உடற்கட்டைக் காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு சிறப்புதான்.

ஃ உங்கள் உடலின் நிறம் சிவப்பாக இருப்பதே மட்டுமே அழகு என்றென்ன வேண்டாம் . கறுப்பான உடல் நிறத்திற்கும் ஒருவித கவர்ச்சி உண்டு. கறுப்பு நிறம் என்பதற்காக எந்த பெண்ணும் கலக்கமடைய தேவையில்லை.

ஃ புற அழகு ஏதுமில்லாத சில பெண்களின் அக அழகு அந்த குறைபாட்டை போக்கிவிடும். நல்ல குணம், அனிய உரையாடல், உயர்ந்த பண்பு, பிறருக்கு உதவும் சுபாவம், விருந்தோம்பல் ஆகிய இந்த அக அழகிற்கு புற
அழகு சமானமே ஆகாது. புற அழகை விட அக அழகே உயர்ந்து நிற்கும்.

ஃ வேறு எந்த அழகையும் விட கல்வி அழகே பேரழகு என்று அழகு 1.காலையில் நீராகாரம் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு தம்ளர் நீர் பருக வேண்டும். இளநீர், பசுமோர், பழரசங்கள், மூலிகைப் பானங்கள் போன்றவைகளை அருந்தவும்.

2.செம்பருத்திப்பூ, இலை, கறி வேப்பிலை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி இவை எல்லாம் குளிர்ச்சி தரும் பொருட்கள். இவைகளைக் கொண்டு மூலிகை எண்ணெய் தயாரித்து தலையில் பூசி வந்தால் உடம்பு சூடு குறையும். கண்ணுக்கும் குளிர்ச்சி தரும்.

beauty3.வெந்தயக்கீரை, கொத்தமல்லி இரண்டையும் மையாக அரைத்துத் தலையில் பூசி குளித்தால் கோடையில் தலைமுடி பட்டுப்போல் மின்னும். வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியிலிட்டு கூழாக்கவும்..இந்தக் கூழை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்வித்து அதன்பின் கண் இமை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் பூசிக் கொள்ளுங்கள். இயற்கையான பொலிவு கிடைக்கும்.

4.கோடையில் வெயிலில் அலைவதால் உஷணக் கட்டி ஏற்படும். அதைப் போக்க ஒரு கிண்ணத்தில் மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்துப் போட்டு கலக்கி கட்டி மீது பூசினால் கட்டி தானாகவே மறையும்.

5.நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை சாறும், வெங்காயச் சாறும் கலந்து பெருங் காயம் சேர்த்து குடித்தால் கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது களைப்பும் தெரியாது.

6.குளித்து முடித்ததும் போக நன்றாக துடைத்துக் கொண்டு, ஏதாவது பாடி டால்கம் பவுடர் அல்லது டியோடரண்ட் ஸ்பிரே உபயோகிக்கவும். இது கோடைக் காலத்தில் நாள் முழுக்க உங்களை நறுமணத்தோடும், புத்துணர்சியுடனும் வைக்கும்.

7.சாத்துக்குடி, எலுமிச்சை, தர் பூசணி, நன்னாரி போன்ற சாறுகளில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடையில் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

8.அதிகமாக வேர்க்கும் கோடைக் காலத்தில் படை, வேர்க்குரு போன்றவை ஏற்பட்டு அரிப்பும், எரிச்சலுமாக அவதிப்படுவீர்கள். கான்டிட்டஸ்டிஸ் பவுடரை பூசிக் கொண்டால் இந்தத் தொல்லை இருக்காது.

9.எண்ணெய், மசாலா, காரம் சேர்த்த உணவு வகைகளை கோடையில் தவிர்ப்பது நல்லது.

10.இரவில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெந்தயத்தை மென்று திங்க உடம்பு உஷணம் குறையும்.

11.நுங்கு சாற்றையும், வெள்ளரிச் சாற்றையும் உடல் முழுவதும் பூசி குளித்தால் கோடையில் வறண்ட சருமம் மிருதுவாகும்.!

Related posts

சுவையான புடலங்காய் பொடிமாஸ்

nathan

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்!….

sangika

திகைப்பில் உலக நாடுகள் !ரஷிய ராக்கெட்டில் இந்தியகொடி ?

nathan

பெண்களே உங்க கை வயசானவங்க கை மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

nathan

சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற!

sangika

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப்!…

sangika

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! சருமத்தை காப்பதோடு பொலிவடையவும் செய்கிறது.

nathan

வைரல் வீடியோ!-தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த மிஸ் இந்தியா ரன்னர் மான்யா சிங்

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக முயன்று பாருங்கள்!….

sangika