ஹேர் கண்டிஷனர்

கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது

சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை.

கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது
சமீபகாலமாகக் கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக நம்மிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை அதிக விலையில் விற்கப்படும் கண்டிஷனர் ஷாம்புகளைத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறிவிடும் என்பதுதான்.

அதுவும் ஷாம்புவை தினமும் தேய்த்துக் குளிக்கலாம் என்று அந்த விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால், இது கூந்தலுக்குப் பெருத்த சேதத்தை விளைவிக்கும். இயற்கை பொருள்களான செம்பருத்தி இலை, புங்க மரத்தின் காய், சீயக்காய் ஆகியவற்றைத் தவிர, வேறு எதையும் தினமும் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லதல்ல.

மூலிகை ஷாம்பு போன்றவை 100% இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு என்றாலும்கூட, அதை வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும். Which is the best shampoo for hair care SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button