சைவம்

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். வயிற்றுப் புண், வாய்புண் சரியாக இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு
உடைத்த பச்சைப் பருப்பு – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
பூண்டுப்பல் – 8
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி – சிறியது 1
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்

செய்முறை :

* கீரை சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து வைக்கவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும்.

* பச்சைப்பருப்பை நன்றாக கழுவி அடிகனமான ஒரு சட்டியில் போட்டு வேகுமளவு தண்ணீர் ஊற்றி துளி மஞ்சள்தூள், பெருங்காயம், ஓரிரு சொட்டுகள் நல்லெண்ணெய் விட்டு வேக விடவும்.

* பருப்பு பாதி வெந்து வரும்போது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, 5 பூண்டு சேர்த்து வேகவிடவும்.

* அடுத்து அதில் கீரையைப் போட்டு துளி உப்பு போட்டு மூடி போடாமல் வேக வைக்க்வும். மூடினால் கீரையின் அழகான பச்சை நிறம் காணாமல் போய்விடும்.

* இடையில் ஓரிரு முறை கிண்டி விடவும். இல்லையென்றால் அடியில் உள்ள கீரை குழைந்தும், மேலே உள்ளது வேகாமலும் இருக்கும்.

* கீரை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மண் சட்டியில் போட்டு சூடாக இருக்கும் போதே கடைந்துவிடலாம்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு கடைசியில் பூண்டுப்பல்லை (பூண்டை கொரகொரப்பாக தட்டி கொள்ளவும்) போட்டு வதக்கிக் கீரை மசியலில் கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்.

* சத்தான கீரை மசியல் ரெடி.

* சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள உருளை அல்லது வாழைக்காய் அல்லது சேப்பங்கிழங்கு போன்றவற்றுடன் அப்பளம் அல்லது வத்தல் பொரித்து சாப்பிடலாம்.201606031050195657 manathakkali keerai masiyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button