முகப் பராமரிப்பு

பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகத்தைப் பொலிவாக்க உதவும் பொருட்கள்!

ஒவ்வொருவருக்குமே நல்ல பொலிவான, மாசற்ற முகம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இக்காலத்தில் அதைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் நாம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருவதால், சரும ஆரோக்கியம் வேகமாக பாதிக்கப்பட்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

மேலும் சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், சருமத்தின் நிறமும் வேகமாக கருமையடைந்துவிடுகின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், தினமும் ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க வேண்டும். அதுவும் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும்.

இங்கு சருமத்தின் பொலிவையும், அழகையும் மேம்படுத்த உதவும் சமையலறைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வர உங்கள் அழகு மேம்படுவதை நீங்களே காணலாம்.

பால்

பாலில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், அவற்றைக் கொண்டு தினமும் முகத்தை 2-3 முறை துடைத்து ஊற வைத்து கழுவி வர, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள தழும்புகள், பருக்கள், கருமை போன்றவை நீங்கும்.

தயிர்

தயிரும் சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும். முக்கியமாக தயிர் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு தயிரை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து துடைத்து எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை வேகமாக அகலும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமத்தில் இருக்கும் அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பொலிவுடன் இருப்பதை உணரலாம்.

கற்றாழை

கற்றாழை ஜெல் சருமத்தின் வறட்சியைத் தடுக்க, கருமையை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய கற்றாழை ஜெல்லை தினமும் 2 முறை முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவி வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தின் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவி வர, சருமத்தில் இருக்கும் கருமைகள் நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

தேன்

தேன் மிகவும் அற்புதமான அழகு பராமரிப்பு பொருள். அத்தகைய தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
11 1460361742 1 milk

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button