சட்னி வகைகள்

சத்தான சௌ சௌ சட்னி

சத்தான சௌ சௌ சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சௌ சௌ சட்னி
தேவையான பொருட்கள் :

சௌ சௌ – 2
தக்காளி – 1
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ¼ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – 1 பிடி
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை :

* சௌ சௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌ சௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.

* வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* நான்ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.

* விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

* சுவையான சத்தான சௌ சௌ சட்னி ரெடி.201606061058457881 chow chow chutney SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button