ஆரோக்கிய உணவு

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்

வீட்டில் சுலபமான முறையில் கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்
அரிசி மாவு – ¼கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு 4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

* பின்பு அதனுடன் அரிசி மாவு சேர்த்து வறுக்கவும். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

* மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

* தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து அதனை மூடி 15 நிமிங்கள் வைக்கவும்

* 15 நிமிடம் கழித்து மாவை திறந்து அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்கு பிசையவும்.

* பின்பு மாவை இடியாப்பம் அச்சினுள் வைக்கவும்

* இட்லி தட்டுகளை எடுத்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். இட்லி தட்டில் மாவை இடியாப்பமாக பிழியவும்.

* இட்லி தட்டை குக்கரில் வைத்து மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்கவும்

* இடியப்பம் வெந்ததும் அதனை இறக்கி ஆற வைத்து ஆறியதும எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்

* சத்தான கேழ்வரகு இடியாப்பம் ரெடி.201606081022122234 how to make nutritious ragi idiyappam SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button