அசைவ வகைகள்

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

வீட்டிலேயே எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 3 /4 கப்
எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
முட்டை – 2
சோயா சாஸ் – கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது – 400 கிராம்
கேரட் – 2
பட்டாணி – அரை கப்
வெங்காயத் தாள் – சிறிதளவு
பாஸ்மதி அரிசி – 2 கப்

செய்முறை :

* அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் வற்றும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 – 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.

* சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

* கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

* கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

* இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

* இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

* எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.
201606080821442137 how to make Chicken Egg Fried Rice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button