ஆண்களுக்கு

அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்களுக்கு சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில விஷயங்கள்!

அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இருக்கும். அதற்காக ஏராளமான பராமரிப்புக்களை நம் சருமத்திற்கும், தலைமுடிக்கும் கொடுப்போம். அதற்கு ஏற்றாற் போல் கடல் அளவில் வழிகளும் உள்ளன. அதில் பல ஆண்களும், பெண்களும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொள்வோம்.

ஆனால் என்ன தான் நிறைய பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், நம் சருமத்திற்கு ஏற்றவாறான பராமரிப்புக்களைக் கொடுத்தால் தான் நல்ல மாற்றத்தைக் காணலாம். இதில் பெண்கள் சரியாக மேற்கொள்வார்கள். ஆண்கள் தான் அதிக தவறுகளை செய்வார்கள்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களின் அழகை அதிகரிக்க சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில விஷயங்களைக் கொடுத்துள்ளது. அதன்படி பின்பற்றினால், நிச்சயம் ஆணழகன் ஆகலாம்.

தகவல் 1 சில ஆய்வுகளில் பால் பொருட்கள் முகப்பருக்களை அதிகம் வரச் செய்வதாக கூறியுள்ளதால், முகப்பருவால் கஷ்டப்படுவோர், பால் பொருட்களை நிறுத்த நினைப்பார்கள். ஆனால் சரும நிபுணர்களோ இப்படி நிறுத்துவதால் மட்டும் முகப்பரு வருவது நின்றுவிடாது என்கிறார்கள். மேலும் அது ஒவ்வொருவரின் சருமத்தைப் பொறுத்தது என்றும் கூறுகிறார்கள்.

தகவல் 2 முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், மேடு பள்ளமான சருமம் போன்றவற்றை ஸ்கரப் செய்வதன் மூலம் சரிசெய்யலாம். அதிலும் சாலிசிலிக் அமிலம் உள்ளதைக் கொண்டு மேற்கொண்டால், இன்னும் சிறந்தது. அதிலும் மாதத்திற்கு ஒருமுறை அழகு நிலையங்கள் சென்று கைத்தேர்ந்தவர்களிடம் செய்வதால், உங்களை நீங்களே புதிதாக உணர்வீர்கள்.

தகவல் 3 முகப்பருவால் அவஸ்தைப்படும் ஆண்கள் 2% சாலிசிலிக் அமிலம் நிறைந்த டோனரைப் பயன்படுத்துவது நல்லது. அதிலும் இரவில் படுக்கும் முன் முகத்தை நீரில் கழுவி விட்டு, டோனரைப் பயன்படுத்தி முகத்தை துடைத்து, பின் மாய்ஸ்சுரைசர் தடவுவது இன்னும் நல்லது.

தகவல் 4 ஆண்களே! நீங்கள் குப்புற படுக்கும் பழக்கம் உடையவராயின், 10 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையையும், பெட்சீட்டையும் மாற்றுங்கள். மேலும் உங்களுக்கு முதுகில் பருக்கள் அதிகம் உள்ளது என்றால், தினமும் டி-சர்ட்டை மாற்றுங்கள்.

தகவல் 5 ஒருவேளை வறட்சியான சருமம் உள்ளவரென்றால், மைல்டு கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவி, பின் லோசனைப் பயன்படுத்துங்கள். மேலும் வெளியே செல்லும் முன் தவறாமல் சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இச்செயலை அனைத்து வகையான சருமத்தினரும், அனைத்து காலங்களிலும் பின்பற்றுவது சருமத்திற்கு நல்லது.

தகவல் 6 க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். மேலும் க்ரீன் டீ குடிப்பதால் சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து சருமம் பாதுகாக்கப்படும். எனவே தவறாமல் ஒரு நாளைக்கு ஒரு கப் க்ரீன் டீயை குடியுங்கள்.

தகவல் 7 முகப்பரு பிரச்சனை உள்ள ஆண்கள் சாலிசிலிக் அமிலம் நிறைந்த க்ரீம்கள் மட்டுமினறி, பென்சோயில் பெராக்ஸைடு நிறைந்ததையும் பயன்படுத்தினால், முகப்பருக்களைத் தடுக்கலாம்.

தகவல் 8 எப்போதும் சருமம் மற்றும் தலைமுடிக்கு நறுமணமற்ற அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க முயலுங்கள். ஏனெனில் நல்ல நறுமணத்துடன் இருக்கும் பராமரிப்பு பொருட்களில் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அழகு தான் பாழாகும்.

தகவல் 9 சருமத்தின் நிறத்தை அதிகரிக்க நினைப்போர் வெளியே செல்லும் முன், ஜிங்க் ஆக்ஸைடு நிறைந்த சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ஜிங்க் ஆக்ஸைடு சருமத்தின் கருமையை மறையச் செய்யும். அதோடு SPF 30+ கொண்ட சன்ஸ்க்ரீனையும் பயன்படுத்தலாம்.

17 1458198781 9 sunscreen lotions

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button