ஆரோக்கிய உணவு

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்பது தான் கேள்வி.

அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து தான் பாதுகாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலர் ஊறுகாயை எல்லாம் ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஊறுகாய் காற்று புகாமல் சரியாக இறுக்கமாக மூடி வெளியில் வைத்தாலே பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதுப் போல ஃபிரிட்ஜில் மட்டுமின்றி, சாதாரணமாகவே உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாப்பதற்கான வழிகளை குறித்து இனிப் பார்க்கலாம்…..

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter)

வேர்க்கடலை வெண்ணெய் கெடாமல் இருக்க நீங்கள் அதை ஃபிரிட்ஜில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊறுகாயை போல காற்று புகாதவாறு ஓர் பாட்டிலில் அடைத்து வைத்தாலே அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

சீஸ்

சீஸை பாதுகாக்கவே சீஸ் பேப்பர் என்ற ஒன்று விற்கப்படுகிறது. அது இல்லையென, பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்க வேண்டாம். சாதாரணமாக காற்றுப்படும் படி வைத்தாலே சீஸ் நன்றாக இருக்கும். மனிதருக்கு மட்டுமல்ல, கெடாமல் இருக்க சீஸிற்கும் ஆக்சிஜன் தேவை.

கரும்பு சர்க்கரை

நீர் படாதவாறு ஏதேனும் ஒரு டப்பாவில் அல்லது பாத்திரத்தில் இறுக்க மூடி வைத்தாலே போதும், கரும்பு சர்க்கரை கெடாமல் இருக்கும்.

மயோனைஸ்

க்ரில் சிக்கன் மற்றும் சண்ட்விச்களுக்கு கொடுக்கப்படும் மயோனைஸ் கெடாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைப்பது சகஜம் தான். ஆனால், அதிகமான குளுமையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். எனவே, பிரிட்ஜின் கதவு பகுதியில் வைப்பதே போதுமானது, அப்படி வைத்தாலே மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் மயோனைஸ் கெடாமல் இருக்கும்.

கோதுமை மாவு

பெரும்பாலும் கோதுமை கெடாமல் இருக்க இறுக்கமான காற்றுப்புகாத பாத்திரத்தில் இறுக்கமாக மூடி வைத்தாலே போதும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு வைத்தாலே நான்கில் இருந்து ஆறு மாதங்கள் வரை கோதுமை மாவு கெடாமல் இருக்கும்.

சோயா சாஸ்

கருஞ்சிவப்பாக இருப்பதை வைத்து சோயா சாஸ் கெடாமல் இருப்பதை கண்டறிய முடியும். ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வாறு வைத்தால் சுவை குறையாது இரண்டு வருடம் வரை கெடாமல் வைத்தக் கொள்ளலாம்.

மசாலா பொருட்கள்

மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப்பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள், சோம்புப் பொடி, மிளகுத்தூள் போன்ற மசாலாப் பொருட்கள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெளியில் காற்றாட வைத்தாலே போதும். நீர் மற்றும் பூச்சி அண்டாதப் படி வைத்துக்கொள்ள வேண்டியது மட்டும் அவசியம்.

தேன்

தேனை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வாறு வைத்தால் அது கட்டியாகிவிடும். முடிந்த வரை தேனை கட்டியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அது உடல்நலத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. கலப்படம் இல்லாத தேன் வாழ்நாள் முழுக்க கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
22 1434972483 7storagetrickstomakeyourfoodslastlonger

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button