உடல் பயிற்சி

இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி

தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும்.

இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி
தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்கிறவர்களுக்கு 40 சதவிகிதம் நீரிழிவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்புப் பிரச்சனைகள், மூட்டு வலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் பரிந்துரைக்கப்படுகிற பயிற்சியாக இருக்கிறது. பருமன் உள்ளவர்களால் அதிக எடையை தூக்க முடியாது என்பதால் இவர்களுக்கு சைக்கிளிங் நல்ல சாய்ஸாக இருக்கும்.

நடைப்பயிற்சியில் 150 முதல் 250 கலோரி வரைதான் எரிக்க முடியும். ஜாக்கிங் செல்லும்போது 300 முதல் 400 வரைதான் கலோரிகள் செலவாகும். சைக்கிளிங்கிலோ 500 முதல் 600 வரை கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 30 நிமிடம் சைக்கிளிங் பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, வருடத்தில்

தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும். இதயத்துடிப்பின் விகிதத்தையும் சராசரி அளவுக்கு மிதமாகக் கொண்டு வர முடியும். இதற்காகவே, ஒருவருக்கு சைக்கிளிங் பயிற்சி கொடுக்கும் முன்னர் அவரது இதயத்துடிப்பைக் கணித்துக்கொண்டு அந்த வேகத்துக்குத் தகுந்தாற்போல சைக்கிளிங் பயிற்சி கொடுப்பார்கள். சைக்கிளிங் பயிற்சியை பலருடன் இணைந்து மேற்கொள்வது இன்னும் நல்ல பலனைத் தரும்.

ஜிம்மில் செய்யும் சைக்கிளிங்கிலேயே இதுபோல் கூட்டாக 10 பேர் சேர்ந்து சைக்கிளிங் செய்யும் ஸ்பின்னிங் முறை இருக்கிறது. இந்த ஸ்பின்னிங் முறையின்போது துள்ளலான இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.

இன்ஸ்ட்ரக்டர் ஒருவர் சொல்லிக் கொடுப்பார். மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ, ஒரு குகைக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ கற்பனை செய்துகொள்ள வேண்டும். இதுதான் ஸ்பின்னிங் சைக்கிளிங் முறை. இது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மனதிலும் உற்சாகம் பெருகும். இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம்மைவிட்டுக் காணாமல் போய்விடும்.

சைக்கிளிங்கில் Aerobic என்ற ஆக்சிஜன் பயிற்சி, Anaerobic என்ற ஆக்சிஜன் இல்லாமல் செய்யும் பயிற்சி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ஏரோபிக் முறை எளிதானது. இரண்டாவது வகை அனரோபிக் பயிற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டு, அதிவேகமாக, மூச்சிரைக்கப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரோபிக் பயிற்சியில் நம் உடலில் இருக்கும் கிளைக்கோஜன் அப்படியே குளுக்கோஸாக மாறி, அதிலிருந்து சக்தி எரிக்கப்படும். அதன்பிறகு, கொழுப்பு எரிக்கப்படும்.

ஆனால், அனரோபிக்கில் கொழுப்பு சக்தி நேரடியாகவே எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் செயல்பாட்டை அதிகரிக்க ஹேண்ட் சைக்கிளிங் என்ற பயிற்சி முறையும் இருக்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், சைக்கிளிங் அப்படி இல்லை. நாமே நமக்குத் தேவையான, செய்ய முடிகிற அளவில் செய்து கொள்ளலாம்.

சைக்கிளிங்குக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இப்படித்தான் சைக்கிளிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். பெண்களுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலுக்கு வசீகரமான வடிவம் கிடைக்கும். Upper body, Lower body என்று நம் உடலை இரண்டுவிதமாக பிரித்துப் பார்த்தால் லோயர் பாடியில்தான் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்திருக்கும்.

சைக்கிளிங்கில் இந்த லோயர் பாடியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு தசைகள் சரியான வடிவத்துக்கு வரும். குறிப்பாக, இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் உதவுகிறது. சைக்கிளிங் பயிற்சி செய்யும் இயந்திரத்தை முடிந்தால் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயிற்சி செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

வெளியிடங்களில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது பரபரப்பான இடங்கள், சுகாதாரமற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிர்த்து நல்ல சூழலில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த சூழலாக இருந்தால் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகமாகவே கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது கிரவுண்டாக இருந்தாலும் சரி… ஜிம்மாக இருந்தாலும் சரி… இரண்டுக்குமே பலன் ஒன்றுதான்!”ரத்தக்கொதிப்பு, பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம்!Cycling can benefit heart patients

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button