மருத்துவ குறிப்பு

“IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும்!

IVF / IUI எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் (Acupuncture Treatment) தீர்வை கொடுக்கிறது.

1465543193 4023

இதன் அடிப்படையில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் விரிவாக பார்ப்போம்!

இதில் முதன்மையான பிரச்சினை என்டோமெட்ரியம் லைனிங் (Endometrium Lining) என்று சொல்லக்கூடிய கருப்பை உள்வரிப்படலம் ஆகும். இது பல திசுக்களாலும், சுரப்பிகளாலும் ஆன ஒரு சுவர் போன்ற படலமாகும். இதன் தடிமனை தான் லைனிங் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். இந்த லைனிங் மூன்று அடுக்குகளை (layer) கொண்டதாகும்!.

இது ௬ முதல் ௮ (6 to 8)mm தடிமனுக்கும் குறைவாக இருப்பின் இது செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்தராது. ௮ முதல் கூ (8 to 9)mm இருக்கலாம், இதற்கு மேலும் ௧௪ முதல் ௧௬ (14 to 16)mm இருந்தாலும் சிறப்பு தான். இது ஒவ்வொரு உடலுக்கும் வேறுபடும். ௯ முதல் ௧௦ (9 to 10)mm என்பது நடைமுறையில் சிறந்த லைனிங் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது!!!

இந்த தடிமனான சவ்வுப்படலம் குறைந்த அளவு இருக்கும்பொழுது கருமுட்டை வைப்பதை (Embryo Transfer) நிறுத்தி அந்த சுற்றை ரத்து செய்துவிடுவார்கள். இந்த வகை ரத்து செய்வதிலிருந்து தப்பித்து முறையாக கருமுட்டையை வைத்து வெற்றிகரமாக கருவூட்டளை செறிவுபடுத்த என்டோமெட்ரியம் லைனிங் ( Endometrium Lining) என்று சொல்லக்கூடிய சவ்வுபடலத்தின் தடிமனை அதிகரிக்கக்கூடிய முறையைத்தான் மருந்துகள் இல்லாமல், பக்க விளைவுகள் இல்லாமல் அக்குபஞ்சர் செய்கிறது. சில குறிப்பிட்ட அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுவதன் மூலம் இந்த என்டோமெட்ரியம் லைனிங்ஐ அதிகப்படுத்தி கருமுட்டையை வெற்றிகரமாக கருப்பைக்குள் வைத்துவிட (Successful Embryo Transfer) முடியும்.

IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும் தொடரும்…..

-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button