உடல் பயிற்சி

முதுகுவலியை போக்கும் அபானாசனம்

முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

முதுகுவலியை போக்கும் அபானாசனம்
செய்முறை :

விரிப்பில் முதுகு தரையில்படும்படி படுக்கவும். கால்களை மடித்து, பாதங்களை மேலே உயர்த்தி இரு முட்டிகளையும் இரு உள்ளங்கைகளால் பிடிக்கவும். முட்டிகளுக்கு இடையில் இடைவெளி இருக்கட்டும். பாதங்கள் தளர்வாக இருக்கட்டும்.

இந்த நிலையில் மூச்சை இழுத்து, ஓரிரு விநாடிகளுக்குப்பின் மூச்சை வெளியே விட்டபடி இரு முட்டிகளையும் மார்புப் பக்கம் நகர்த்துங்கள். இப்போது கால்கள் நன்கு அகண்டு, முழங்கைகள் தரையைத் தொடும். ஓரிரு விநாடிகளுக்குப்பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதுபோல ஆறு முறை செய்யவும்.

பலன்கள் :

அடிவயிறு, கீழ் முதுகு ஆரோக்கியம் பெறும். தோள்பட்டை நெகிழ்வுத்தன்மை அடையும். நாட்பட்ட முதுகுவலி குறையும்.201606111003403859 apanasana control back pain SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button