சட்னி வகைகள்

ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி

அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி சீரகத்திற்கு உண்டு. வாய்க்கசப்பு, ஜீரண சக்தி தூண்ட இந்த துவையலை தினமும் செய்து சாப்பிடலாம்.

ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னி
தேவையான பொருட்கள் :

சீரகம் – அரை கப்,
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சின்ன வெங்காயம் – 10,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.

செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

* நன்றாக ஆறியதும உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

* இந்த சீரக சட்னி பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.201606200953312342 digestive problem control Jeera chutney SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button