சரும பராமரிப்பு

ஐந்தே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இதோ சில அற்புத வழிகள்!

skin whitening tips in tamil, வெள்ளைத் தோலின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டு தான் இருப்போம். அதில் பலர் க்ரீம்களைப் பயன்படுத்தி வெளிக்காட்டிக் கொண்டாலும், இயற்கை வழிகளை முயற்சித்தால், அதனால் கிடைக்கும் பல நிரந்தரமானதாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு வெள்ளையாக நினைக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் நீங்களும் வெள்ளையாகலாம்.

குங்குமப்பூ சிறிது

குங்குமப்பூவை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படுவதை நன்கு காணலாம்.

தயிர்

பலரும் தயிர் சருமத்திற்கு ஈரப்பசையை மட்டும் தான் வழங்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. அதற்கு வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் பால் பவுடர்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள கருமை நீங்கி சரும நிறம் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்

வெள்ளரிக்காய் சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி வர, சரும வறட்சி நீங்குவதோடு, சரும நிறமும் மேம்படும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள அழுக்குகள், கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.

தக்காளி மற்றும் தயிர்

தக்காளியை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமம் பொலிவோடு காணப்படும்.

பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர்

தினமும் இரவில் படுக்கும் முன் பச்சை பாலில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவுவதன் மூலமும், சரும நிறத்தை அதிகரிக்கலாம்.

தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு

தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சரும நிறம் அதிகரிக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

தேனுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்துக் காணப்படும்.

15 1465983179 10 honeyandlemon

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button