எடை குறைய

பேலியோ டயட் என்றால் என்ன?

பேலியோலிதிக் காலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை குறிக்கும். அப்போது முறையான விவசாய நடைமுறைகள் இல்லை. அக்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சோயா, சோளம், கோதுமை, சிறுதானியங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவுமே இல்லை. மக்களின் உணவு சுட்ட இறைச்சியும் சில காய்கறிகளுமாக மட்டுமே இருந்தன.

தானியம், சர்க்கரை உள்ளிட்டவை இல்லாத இந்த உணவை உண்டவர்களுக்கு டயபடிஸ், பிளட்பிரஷர், மாரடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, ஹைப்போதைராடிசம், காக்கா வலிப்பு, சொரியாசிஸ், விடில்கோ (வெண்திட்டுக்கள்), கான்சர் முதலான இன்றைய நகர்ப்புற மனிதன் எதிர்கொள்ளும் வியாதிகள் இருந்ததே இல்லை.

நம் முன்னோர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடைப்பிடித்த அந்த உணவுமுறையை இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகளை வைத்து சமாளித்து நோயற்ற வாழ்வினை உறுதி செய்யக்கூடிய உணவுமுறையே பேலியோ டயட்.

கொழுப்பு நல்லது!

பேலியோ டயட்டில் அனுமதிக்கப்பட்ட உணவுவகைகள் : சாப்பிடலாம்?

முட்டை
இறைச்சி
மீன்
காய்கறிகள்
மூலிகைகள்
பாதாம், வால்நட் முதலானவை (நிலக்கடலை கூடாது)
சுவைக்காகவும், கால்சியம் சத்து பெறவும் சிறிதளவு பால், தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
தண்ணீர்

இவற்றை உண்பதற்கு அளவு வரையறை என்று எதுவுமில்லை. பசி அடங்கி முழுதாக வயிறு நிரம்பும் வரை முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம்.முழு முட்டையையும் சாப்பிட வேண்டும். அதில் மஞ்சள் கருவை தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடெல்லாம் இல்லை. கொழுப்பு நிரம்பிய இறைச்சியை சாப்பிடலாம். கருவாடு, சிக்கன் பிரெஸ்ட் போன்றவற்றில் கொழுப்பு குறைவாக இருக்கும். அவற்றை அளவாக உண்டால் போதும்.

பொதுவாக கொழுப்பை தவிர்க்க சொல்கிறார்களே என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பேலியோவை பொறுத்தவரை சர்க்கரை சத்து கொண்ட உணவுகள் எதுவுமில்லை என்பதால் இங்கு கொழுப்பே உங்கள் ஜீரணத்துக்கு ஏற்ற எரிபொருளாக செயல்படுகிறது.lM5JPcm

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button