ஃபேஷன்

பொருத்தமான சட்டையை தெரிவுசெய்வது எப்படி?

அழகாக இருக்கும் எல்லோரும் அழகாகத் தோற்றமளிப்பதில்லை; முக்கியமாக ஆண்கள்! சிலர் எந்தச் சட்டையை அணிந்தாலும் கவர்ச்சியாகத் தோற்றமளிப்பார்கள். சிலரோ, எப்போது பார்த்தாலும் அவர்களுக்கு ஒவ்வாத சட்டைகளையே தேர்ந்தெடுத்து அணிவர்.

தனக்குப் பொருத்தமான சட்டைகளை மிகச் சரியாக வாங்க எல்லா ஆண்களுக்கும் தெரிவதில்லை. ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை, கீழே தரப்பட்டுள்ள விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொண்டால்!

தற்போது விற்பனை செய்யப்படும் சட்டைகள், பலவித கொலர்களைக் கொண்டவை. ஆனால், எல்லாக் கொலர்களும் எல்லா முக அமைப்புகளுக்கும் பொருந்தாது.

நீங்கள் சற்று அகலமான முகத் தோற்றம் கொண்டவர்கள் என்றால், மெல்லிய கொலர் கொண்ட சட்டைகளையே அணிய வேண்டும். இதனால் உங்களது முகம், சற்று நீளமானது போன்ற தோற்றம் தரும்.

நடுத்தர அளவுடைய முகம் கொண்டவர்கள் எனில், சற்றே விரிந்த அமைப்புக் கொண்ட கொலரைக் கொண்ட சட்டையைத் தேர்வுசெய்து அணிந்துகொள்ள வேண்டும்.

ஒடுங்கிய முகத் தோற்றம் கொண்டவர்களாக இருந்தால், அகன்ற கொலருடைய சட்டைகளை அணிந்துகொள்ளலாம். இதன் மூலம், உங்கள் முகத்தை சற்று அகன்றதாகக் காட்ட முடியும்.

சட்டையின் தோள்மூட்டுப் பகுதிகள் மிகச் சரியாக உங்கள் தோள்மூட்டுடன் ஒன்றியிருக்க வேண்டும். இதன்மூலம், உங்கள் உடல்பகுதியைத் தனித்துக் காட்ட முடியும். உடல் பருமனானவரோ அல்லது மெலிந்தவரோ – யாராக இருந்தாலும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும்.

முழுநீளச் சட்டை அணிவதாக இருந்தால், அதன் கைப்பகுதி சரியாக மணிக்கட்டில் முடிவடைய வேண்டும். இதனால், கைகளை அசைக்கும்போது, கையின் ஒரு சிறு பகுதி வெளியே தெரியும். அரைக்கைச் சட்டை அணிவதாக இருந்தால், அது முழங்கைக்குச் சற்று மேல் வரை கை தெரியும்படி இருக்க வேண்டும். இந்த அம்சம் பலரையும் வசீகரிக்கும்.

சட்டையை காற்சட்டைக்கு வெளியே தெரியும்படி அணிவதாக இருந்தால், சட்டையின் நீளம், உங்கள் பின்புறத்தின் கணிசமான பகுதியை மறைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். இது, ஒரு கௌரவமான தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும்.Shirt 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button