இனிப்பு வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை

குழந்தைகளுக்கு பொரி உருண்டை மிகவும் பிடிக்கும். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது.

குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை
தேவையான பொருட்கள் :

பொரி – 2 கப்,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
தண்ணீர் – 1/4 கப்,
நெய் – சிறிதளவு.

செய்முறை :

* வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

* கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

* பாகு நன்றாக கொதிக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

* வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்கவும்.

* பின்னர், பொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தடவிக் கொண்டு, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

* சுவையான பொரி உருண்டை ரெடி.201606231412271337 children like pori urundai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button