சைவம்

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இவ்வாறு கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

அரிசி – 250 கிராம்,
அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.

* கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.

* ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

* தண்ணீர் நன்கு கொதித்த உடன் உடைத்த ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.

* வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* இந்த அரிசி ரவை கீரை கொழுக்கட்டை மிகவும் சத்து நிறைந்தது. 201606240728582200 rice keerai kolukkai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button