ஆரோக்கியம் குறிப்புகள்

பீர்…! இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க!!!

பொதுவாகவே பீர் என்றால் இளைஞர்கள் மனதில் உற்சாகம் பொங்கும். அதுவே வீட்டில் தெரிந்தால் அப்பாவின் கையால் செருப்படி விழுகும். பீர் குடித்தால் உடல்நலத்திற்கு கெடுதல் என்று ஒரு புறமும், அதில் நன்மை இருக்கிறது என மறுபுறமும், குடிக்கும் நமக்கே புரியாத அளவு ஊரெங்கும் பலவிதமாக கட்டுரைகளும், பேருரைகளும் ஆற்றி வருகிற இந்நேரத்தில், பீரின் எண்ணற்ற பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இது உடல்நல பயன்கள் அல்ல நண்பர்களே. வீட்டு நல பயன்கள்.

ஆம்! பீர் குடித்தால் தொப்பை வரும், இதய பாதிப்பு வரும் என பயமுறுத்தும் பெரியவர்களிடம் இதை கூறி கூலிங் பீர் போல அவர்களது நெஞ்சை குளிர வையுங்கள். பீரை கொண்டு துருப்பிடித்த கறைகளை நீக்க இயலுமாம், நம் தோட்டத்திற்கு பட்டாம்பூச்சிகளை வரவேற்க இயலுமாம், மர சாமான்களை அழகுற செய்ய முடியுமாம், இதற்கு எல்லாம் மேலே பெண்கள் விரும்பும் வகையில் அவர்களது தங்க நகைகளை மினுமினுக்க வைக்க முடியுமாம். அட இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கிறது தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

முடி உதிர்தல் மற்றும் பொடுகு

3 ஸ்பூன் பீர் உடன் 1/2 கப் தண்ணீரை கலந்து உங்கள் தலையில் நன்கு தேய்த்து கொடுக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு நீராடினால். உங்கள் முடி உதிர்தல் மற்றும் உடைதல் குறையுமாம். பீரின் தன்மை மடியில் ஏற்படும் சேதத்தை குறைகிறதாம். மற்றும் இதனால் பொடுகுத் தொல்லையும் குறைகிறதாம்.

துருவை போக்கும்

உங்களது வீட்டில் சமையல் பாத்திரங்கள் துருப்பிடித்து விட்டது என வீசிவிட வேண்டாம். பீரை துருப்பிடித்த இடத்தில் ஊற்றி கொஞ்ச நேரம் ஊறிய பின்பு கழுவினால் துரு நீங்கிவிடுமாம்.

பட்டாம்பூச்சிகளை கவரும்

உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால், அங்கு பட்டாம்பூச்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறீர்களா? கொஞ்சம் பிணைந்த வாழைப்பழத்துடன் பீரை கலந்து உங்கள் வீட்டில் இருக்கும் மரம் மற்றும் கற்கள் இருக்கும் இடத்தில் தெளித்து வைத்தால் பட்டாம்பூச்சிகள் உங்கள் தோட்டத்தை நோக்கி படை எடுக்குமாம்.

தங்க நகை மினுமினுக்க

உங்கள் பழைய தங்க நகைகள் பொலிவிழந்து போய்விட்டதா? கவலையை விடுங்கள்… பீரை தேய்த்து உங்கள் தங்க நகைகளை கழுவினால் மீண்டும் பளபளக்கும்.

பச்சை புல்வெளி

உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும் புல்வெளி காய்ந்து போவது போல இருக்கிறதா? காய்ந்தது போல இருக்கும் புல்வெளி பகுதியில் பீரை தெளித்து வந்தால் அந்த பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நச்சு கிருமிகள் இறந்துவிடும். மீண்டும் பச்சை பசேலென்று வளர உதவும்.

மர சாமான்கள்

திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் பழைய பொலிவுற்ற மர சாமான்களை எங்கு ஒளித்து வைப்பது என இடம் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அட எதற்கு ஒளித்து வைக்க வேண்டும். பீரில் ஒரு துணியை நனைத்து மர சாமான்களை துடைத்துவிட்டால் பழையது புதியது போல காட்சியளிக்கும்.

துரு கறைகள்

உங்கள் வீட்டில் உள்ள இரும்பு கட்டில், நாற்காலிகளில் உள்ள துரு கறையை போக்க என்ன செய்தும் போகவில்லையா? பீரை கொண்டு துரு கறை உள்ள பகுதிகளை துடைத்து அதன் மேல் ஈரமற்ற துணியை வைத்து அழுத்தி துடைத்தாலே துரு கறை காணாமல் போய்விடும்.

இறைச்சியை அறுக்க

வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சியை வாங்கி வைத்துவிட்டு அறுப்பதற்கு பெரும் பாடுபடுகிறீர்களா? இறைச்சியின் மீது பீரை ஊற்றி பின் அறுத்தீர்கள் என்றால் சுலபமாக இறைச்சியை துண்டு துண்டாக வெட்ட முடியும்!!!

12 1426161619 1brilliantusesforbeer

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button