முகப் பராமரிப்பு

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!

கோடையில் சருமம் வறட்சியுடனும், அரிப்புடனும் இருக்கிறதா? அதிலும் உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக உள்ளதா? இதனால் உங்கள் முகம் மென்மையிழந்து அசிங்கமாக காணப்படுகிறதா? இதற்கு முக்கிய காரணம், நீங்கள் உங்கள் சருமத்துளைகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது தான்.

அடிக்கடி முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையும் நீங்கி, சருமத் துளைகள் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும். இங்கு உங்கள் மூக்கைச் சுற்றியிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்வதோடு, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.

இந்த ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்வதோடு, உங்கள் சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் மேம்படுத்தும்.

வால்நட் ஃபேஸ் பேக்

ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி அதனைக் கொண்டு நேரடியாக முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

ஆப்ரிகாட் ஃபேஸ் பேக்

கரும்புள்ளிகளைப் போக்கும் மற்றொரு பழம் தான் ஆப்ரிகாட். இப்பழத்தின் சாறு சருமத்தை மென்மையாக்குவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்கும். அதற்கு இப்பழத்தை அரைத்து, முகத்தில் தடவி, உலர வைத்து பின் உரித்து எடுத்தால், கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.

பச்சை பயறு ஃபேஸ் பேக்

பச்சை பயறை அரைத்து மாவு செய்து, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வர, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

க்ரீன் டீ ஃபேஸ் பேக்

க்ரீன் டீயின் பையில் உள்ள பொடியைக் கொண்டும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு க்ரீன் டீ பொடியில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வேர்க்கடலை ஃபேஸ் பேக்

வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் ஃபேஸ் பேக்

1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயுடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து கலந்து, அக்கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவி, மீண்மும் அந்த முறையை 10 நிமிடம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
04 1462346005 1 walnuts

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button