சிற்றுண்டி வகைகள்

கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி

ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது.

கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி
தேவையான பொருட்கள்:
201606251428372114 jhal muri kolkata special snack SECVPF
பொரி – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
சேவ்/மிக்ஸர் – 1/2 கப்
கருப்பு கொண்டைக்கடலை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கடுகு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் – சிறிது

6AD93BF5 C18D 44D6 A3C5 F69F85B53C6A L styvpf

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கருப்பு கொண்டைக்கடலையை ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.

5934C69F 308E 43D6 880D 6B0A3DB4FA7C L styvpf

* ஒரு பெரிய பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!

FF1FA0B1 BAFE 4983 898F D9CDF27E6FC0 L styvpf

* மாலை நேரத்தில் டீ, காபியுடன் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

* குழந்தைகளுக்கு மிகவும் விருப்பான ஸ்நாக்ஸ் இது. இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்ய முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button