சரும பராமரிப்பு

சரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்

தேங்காய் எண்ணெயை கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

சரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்
தேங்காய் எண்ணெய் சரும சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யும் இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தி முகப்பருவை உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேயிலை மர எண்ணெய் – 3 துளிகள்
லாவெண்டர் எண்ணெய் – 3 துளிகள்
தேன் – 2 டீஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

முகத்தை கழுவிய பின்னர் பார்த்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.homemade face wash wrinkles

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button