முகப் பராமரிப்பு

தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!

முதலில் ஒருவரை ஈர்ப்பது முகம், நிறம் மற்றும் புன்னகை தான். இந்த மூன்றும் ஒருவருக்கு சிறப்பாக இருந்தால், எளிதில் மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள முடியும். அதிலும் நீங்கள் மற்றவர்களை எளிதில் கவர நினைத்தால், சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு வழங்க வேண்டியது அவசியம்.

ஆனால் தற்போது சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் பலருக்கு நேரம் இல்லை. அதே சமயம் சருமத்தில் அழுக்குகளின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும், ஓர் அருமையான வழி ஒன்று உள்ளது.

அது வேறொன்றும் இல்லை, தினமும் சிறிது கேரட்டை அரைத்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் அன்றாடம் ஒரு கேரட்டை உட்கொண்டு வருவதும் சரும அழகை மேம்படுத்தும்.

பொலிவான முகம்

கேரட் மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவதால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.

பருவில்லா முகம்

கேரட் மற்றும் பாலை ஒன்றாக கலந்து தினமும் மாஸ்க் போடும் போது, சருமத்தில் உள்ள பருக்கள், பருக்களால் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் காணப்படும்.

இளமை தோற்றம்

முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் காணப்படுகிறதா? அப்படியெனில் இந்த கேரட் மற்றும் பால் மாஸ்க் நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் இந்த மாஸ்க் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தைத் தரும்.

சரும வறட்சி நீங்கும்

உங்களுக்கு சருமம் அதிகம் வறட்சி அடையுமாயின், இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கலாம்.

நேச்சுரல் சன்ஸ்க்ரீன்

கேரட் மற்றும் பால் கலவை சிறந்த நேச்சுரல் சன்ஸ்க்ரீன் போன்று செயல்பட்டு, சரும செல்கள் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். இதனால் சருமம் கருமையடைவது தடுக்கப்படும்.

சரும அரிப்பு மற்றும் எரிச்சல்

சிலருக்கு வெயிலில் அதிகம் சுற்றினால், அரிப்புக்கள், மற்றும் எரிச்சல்கள் ஏற்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

தேவையில்லாத முடி நீங்கும்

கேரட் மற்றும் பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால், முகத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும் சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2016/what-happens-when-you-apply-carrot-and-milk-on-your-skin-011251.html#slide66789

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button