மருத்துவ குறிப்பு

தலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம் போன்றவற்றை கொண்டு தலைவலியை போக்கலாம். உணவு முறை மாற்றத்தால் தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியாக இருந்தால் அது மிகவும் வேதனையை கொடுக்கிறது. இதனால் மயக்கம், வாந்தி போன்றவை ஏற்படும். முறையாக சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. போதிய அளவு தூங்க வேண்டும். செரிமானம் ஆகாத பொருட்களை சாப்பிடக் கூடாது. குறிப்பாக, இரவு நேரத்தில் கீரை, தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

வெந்தயத்தை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், தேன். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். களிபதத்தில் வந்தவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை, 48 நாட்களுக்கு ஒருவேளை சாப்பிட்டுவர தலைவலி குணமாகும்.

அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கு மலச்சிக்கல், தூக்கமின்மை, செரிமானமின்மை ஆகியவை காரணமாகிறது. இப்பிரச்னைகளுக்கு வெந்தயம் மருந்தாகிறது. இது இரும்பு, நார்ச்சத்து மிகுந்தது. சீரகத்தை பயன்படுத்தி ஒற்றை தலைவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீரகம், நெல்லி வற்றல், பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதனுடன் ஊறவைத்த நெல்லி வற்றல் தண்ணீருடன் சேர்க்கவும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர தலைவலி குணமாகும்.

ரத்த அழுத்தத்தினால் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. இதற்கு சீரகம், நெல்லி வற்றல் மருந்தாகிறது. சீரகத்தால் ரத்த அழுத்தம் சீராகி தலைவலி சரியாகிறது. கறிவேப்பிலையை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, பேரிட்சம் பழம், தேன். கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பசையை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.

இதில், 2 பேரிட்சம் பழத்தை துண்டுகளாக்கி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர தலைவலி குணமாகும். கறிவேப்பிலையில் மிகுதியான இரும்பு சத்து உள்ளது. உடலுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

திடீரென அடிபடும்போது வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அதற்கு தீர்வுகாணும் மருத்துவத்தை பார்க்கலாம். புளியை சிறிது எடுத்து கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை அடிபட்ட இடத்தின் மேலே பூசுவதால் வெகு விரைவில் ரத்தக்கட்டு கரையும். வலி, வீக்கம் குறையும். 65kLXwi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button