அசைவ வகைகள்

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி

ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானி
தேவையான பொருட்கள்:

சிக்கன் – முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 4
பட்டை – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு…

தயிர் – 1 கப்
வெங்காய பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்

செய்முறை:

* சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* 3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

* பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

* அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.

* சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!201607021419457581 how to make spicy chicken afghani SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button