சிற்றுண்டி வகைகள்

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த புல்கா ரொட்டி / சுக்கா சப்பாத்தி மிகவும் நல்லது.

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :
201607040907295184 how to make pulka SECVPF
* கோதுமை மாவில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

* பின் அந்த மாவை சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.

196AAB15 AF9B 422F B2FB 6F507604A946 L styvpf

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு சற்று வேகவும்

78D9DAAC 3D50 4B73 904C 28D9A45FF912 L styvpf

* திருப்பிப் போட்டு அதே போல் மறுபக்கமும் சற்று லேசாக வேக விடவும்.

18CF5B49 32AD 456D ACC1 7BF1FA9F5D35 L styvpf

* இருபுறமும் சற்று வெந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேகவிடவும்.

DC862667 CDE9 464B 9D33 FF1AF19520F4 L styvpf

* சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

* சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி.

குறிப்பு :

* சப்பாத்திகளை ஒரே மாதிரி சமமாக தேய்க்க வேண்டும் அவ்வளவு தான்.

* எண்ணேய் இல்லாமல் செய்யப்படும் சப்பாத்தியைத் தான் சுக்கா சப்பாத்தி அல்லது புல்கா ரொட்டி என்பர். மேலே நெய் (அ) எண்ணெய் தடவினால் நமக்கு உருசியாக இருக்கும். தடவாமலும் இருக்கலாம்.

* 1 ஆழாக்கு மாவுக்கு 1/2 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button