சரும பராமரிப்பு

சொரசொரப்பு… கருமை… காணாமல் போக எளிய வழிகள்!

ww

பெண்கள் வெளியே பேசத் தயங்கும் விஷயங்களில் ஒன்று, அக்குள் குறித்த சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள். ஸீ த்ரூ ஸ்லீவ்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும் பெண்களுக்கு மட்டுமல்ல, இது ஆரோக்கியம் வேண்டும் அனைத்துப் பெண்களும் கவனம்கொடுக்க வேண்டிய விஷயமும்கூட. அக்குள் பகுதியில் படரும் கருமை மற்றும் சொரசொரப்பை நீக்க எளிமையான தீர்வுகளைச் சொல்கிறார், ஈரோட்டில் உள்ள மஹா ஹெர்பல் பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மகேஸ்வரி.

அக்குளின் கருமை நீங்க…

red dot1 அண்டர் ஆர்ம்ஸைப் பொறுத்தவரை, பொதுவாக வீட்டில் ஷேவ் செய்வதைவிட பார்லரில் வேக்ஸிங் செய்துகொள்வது சிறந்தது.

red dot1 அக்குளின் கருமை நிறத்தை ஸ்பெஷல் டேன் ப்ளீச் செய்துவிட்டு பின்னர் வேக்ஸிங் செய்வதன் மூலம் நீக்கலாம். ஒவ்வொரு முறை வேக்ஸிங் செய்யும்போதும் கூடவே ஹெர்பல் ப்ளீச் செய்துகொண்டால் ஒவ்வாமை பிரச்னை ஏற்படாது.

red dot1 இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சில நாட்களில் கருமை நிறம் மாறும்.

red dot1 குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து…  பஞ்சு அல்லது காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்வதுபோல துடைத்து வர, நாளடைவில் கருமை நீங்கி பளிச்சிடும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்

red dot1 கசகசாவை பால் அல்லது தயிரில் ஊறவைத்து அரைத்து, அந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, நாளடைவில் கருமை நீங்கும்.

red dot1 வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை அக்குள் பகுதியில் தடவி, 10 – 15 நிமிடங்கள் காயவிட்டு கழுவிவர, அந்த இடம் குளிர்ச்சி பெறுவதோடு இயற்கை ப்ளீச் ஆகவும் அமையும்.

red dot1 3 ஸ்பூன் தயிர், 5 சொட்டு எலுமிச்சைச் சாறு, அரை ஸ்பூன் சர்க்கரை என்கிற விகிதத்தில் ஸ்கிரப் தயாரித்து, அதை அக்குள் பகுதியில் மசாஜ் செய்வதுபோல ஸ்கிரப் செய்துவர, நாளடைவில் பளிச் என ஆகும்.

red dot1 தரமான டியோடரன்ட்டாகப் பயன்படுத்துவது முக்கியம். ஆனாலும் அதை நேரடியாக அக்குளில் படும்படி அல்லாமல், ஆடையிலேயே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அக்குள் கருமையாக இருக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

red dot1 அக்குளில் வியர்வை, துர்நாற்றம் பிரச்னை அதிகம் உள்ளவர்கள், கைகள் இறுக்கமாக இருக்கும் ஆடைகள் தவிர்த்து தளர்வாக உடுத்தவும்.

red dot1 உடல் சூடு, அதிக எடை போன்றவையும் அக்குள் பகுதியில் கருமை படரக் காரணமாகலாம். எனவே, இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவும்.

சொரசொரப்பு நீங்க…

ee

red dot1 ஆரஞ்சுப் பழத்தின் தோலை காயவைத்து அரைத்து, அதோடு தக்காளிச் சாறு சேர்த்துக் கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவி 10 – 15 நிமிடங்கள் காயவிட்டுக் கழுவி வர, சொரசொரப்பு நீங்கி மிருவாகும்.

red dot1 அக்குள் பகுதியில் பாதாம் எண்ணெயால் ஐந்து நிமிடங்கள் தினமும் மசாஜ் செய்துவந்தாலும், சொரசொரப்பு நீங்கும்.

red dot1 உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள், கறுப்பாக, சொரசொரப்பாக இருக்கும் அக்குள் பகுதிகளுக்கு புத்துணர்வு தரவல்லவை. உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதை அக்குளில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதேபோல ஆப்பிள் சாற்றையும் பயன்படுத்தலாம்.

red dot1 சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவிவர, வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button