26.7 C
Chennai
Wednesday, Feb 5, 2025
facial 05 1467713198
முகப் பராமரிப்பு

முகத்தில் எண்ணெய் வடியுதா? இந்த ஃபேஸியல் செய்யலாம். !

நம் எல்லாருக்குமே குழந்தையாய் இருக்கும்போது இருக்கும் சருமம் , நிறம் இருப்பதில்லை.அதிக நேரம் வெயிலில் அலைய வேண்டிய சூழ் நிலை, மாசுபட்ட காற்று, தூசு, புகை எல்லாம் சேர்ந்து நம் சருமத்தை பாதிக்கின்றன. இதனால் சருமம் களையிழந்து, கருமையாகவும், முகப்பரு போன்ற பாதிப்புகளையும் தருகிறது.

சருமத்தை ஆழமாக சுத்தபடுத்த ஸ்க்ரப், க்ளென்ஸர், ஆகியவை உபயோகப்படுத்த வேண்டும். சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்ரைஸர் உபயோகிக்க வேண்டும்.

இவைத் தவிர ஃபேஸியல் செய்வதால், முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, தளர்வடைந்த தசைகளை இறுகச் செய்யும். சுருக்கங்களைப் போக்கும். முகம் இளமையாக இருக்கும்.

வீட்டிலேயே செய்தாலும் , தகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் செய்தால், சருமம் இன்னும் ஊட்டம் பெறும். ஃபேஸியலில் எவ்வளவோ ஹெர்பல் ஃபேஸியல் வந்துள்ளன. க்ரீம்களை உபயோகிக்காமல், பழங்கள், காய்களை ஃப்ரஷாக வாங்கி மசித்து செய்கிறார்கள்.
facial 05 1467713198
கோல்டு ஃபேஸியலும் சருமத்திற்கு நிறமளிக்கும் வகையில் ஏற்றது. அதைப் போலவே பேர்ல் ஃபேஸியல் இப்போது பரவலாக அழகு நிலையங்களில் செய்யப்பட்டு வருகிறது. இது எண்ணெய் சருமம் பெற்றவர்களுக்கு ஏற்றது.

வறண்ட சருமம் மற்றும் சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனை செய்வது தவிர்க்கலாம். அல்லது சரும அலர்ஜியை தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்த பின் உபயோகிக்கலாம்.

இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, சருமத்தை முகப்பருக்களிலிருந்து பாதுகாக்கும். சுருக்கங்களை வர விடாமல் தடுக்கும். இதனுடைய மற்ற பலன்களை காண்போம்.
pearl 05 1467713205
கருமையை அகற்றும் : வெயிலினால் உண்டாகும் கருமையால் முகம் ஒரு நிறத்தையும், உடல் ஒரு நிறத்தையும் காண்பிக்கும். இது அழகை கெடுக்கும்படி இருக்கும் அப்படி இருப்பவர்கள் மாதம் ஒரு முறை பேர்ல் ஃபேஸியல் செய்யும்போது, கருமைக்கு குட்பை சீக்கிரம் சொல்லிவிடலாம். கரும் புள்ளி, மரு ஆகியவை நீங்கி, பளிசென்ற தோற்றத்தைப் பெறலாம்.

சுருக்கத்தை நீக்கும் : பேர்ல் ஃபேஸியல் செய்து கொண்டால், முகத்தில் உருவாகும் சுருக்கங்கள் விரைவில் மறைந்துவிடும். முகத்தோற்றம் பொலிவாக காண்பிக்கும். சருமம் ஜொலிக்கும்.

சருமம் மென்மையாகும் : மென்மையான சருமத்தை பெற வேண்டுமானால் உங்களுக்கு பேர்ல் ஃபேஸியல்தான் சிறந்த வழியாக இருக்கக் கூடும். சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி மிருதுவான சருமத்தை தரும்.

ஆழமாக சுத்தப்படுத்தும் : என்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அழுக்குகள் இறந்த செல்கள் ஆகியவை சருமத் துளைகளிலேயே அடைப்பட்டு. சருமம்த்தை கடினமாக்கி, பிரச்சனைகளைத் தரும். அவர்களுக்கு ஏற்ற ஃபேஸியல் இது.

ஏனெனில் இவை சருமத்தில் துளைகளிலிருக்கும் அழுக்களை நீக்கி சுத்தப்படுத்தும். துவாரங்களை சுருங்கச் செய்து, முகத்தை இளமையாக வைத்திருக்கும்.

Related posts

ஆண்களே உங்களுக்கு முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..?இதை முயன்று பாருங்கள்…

nathan

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

உங்கள் தோலிற்கு ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் 10 விதமான் நன்மைகள்

nathan

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கனுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளிச்சென்ற முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

nathan

உங்க முகம் அசிங்கமான கருமையிலிருந்து விடுபட வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்!

nathan