மருத்துவ குறிப்பு

அம்மா என்பவள் யார்?

தன் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்.

அம்மா என்பவள் யார்?
தன் பிள்ளைகளுக்கு அன்பைத் தரும் வற்றாத ஜீவ நதி.

தன் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்.

பிள்ளைகள் வளர்ந்து கூட்டை விட்டு பறந்த பிறகும் அவர்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் அபூர்வ பிறப்பு.

தன் பிள்ளைகள் ஆசைப்படும் முடியாத ஒன்றினை முடிக்க வேண்டும் என முயற்சிக்கும் உறுதி கொண்டவள்.

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தான் பெற்றோர் ஆகும் பொழுதே தன் தாய் தன் மீது வைத்திருந்த பாசத்தினை முழுமையாய் உணர்கின்றனர்.

ஒரு தாய் தன் குழந்தையை உலகிலிருந்து காப்பாற்றுவாள்.

பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டாலும், அவமானப்படுத்தப்பட்டாலும் ஒரு புள்ளி குறையாமல். தன் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்துபவள்.

பொறுமை, பொறுமை, பொறுமை, தன் குழந்தைகளின் தீரா தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ளும் பூதேவி.

மென்மையான கண்டிப்பு, வலிக்காத ஒழுக்கம். எப்போதும் பிரண்ட்.

குழந்தை எந்த எந்த விதத்தில் தன்னை அசிங்கம் செய்தாலும் அதனை சிரித்துக் கொண்டே ஏற்று குழந்தையை சுத்தம் செய்பவள்.

‘ரிலாக்ஸேஷன்’ என்ற சொல்லுக்கு பொருள் அறியாதவள்.

மிகப்பெரிய சோதனைகளை தாண்டினாலும் அதனை மார் தட்டி பெருமை பேசாதவள்.

அம்மா என்ற ஒருவர் இல்லையென்றால் அப்பாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்.

ஒரு தாயின் முதல் 40 வருட காலம் மிகவும் கடினமானதாம். ஆனால் அதற்குள் அத்தாய்க்கு 60-க்கு மேல் ஆகியிருக்குமே.

நல்ல அம்மாவோட வீட்டில் குழந்தைங்க சந்தோஷமா இருப்பாங்க. வீடு சாமான்கள் தாறுமாறாய் சிதறி இருக்கும்.

பிரச்சினை என்று ஒன்று வந்தால் மனிதன் தாயிடம் தான் முதலில் ஓடுவான்.

ஒரு தாயால் மட்டும்தான் தன் பிள்ளைகள் சொல்வதையும் புரிந்து கொள்ள முடியும். சொல்லாததையும் புரிந்து கொள்ள முடியும்.

ஒருவனுக்கு எத்தனை வயதானாலும் தாய்க்கு அவன் குழந்தைதான்.

ஒருவனுக்கு குடும்பம் என்ற ஒன்று இருந்தால் அவன் மிகப்பெரிய பணக்காரன்.

‘அம்மா’ குழந்தைகளின் மந்திரச் சொல்.

குழந்தை பிறக்கும் போதே தாயும் பிறக்கிறாள்.

தாய் – நமக்கு எந்த வயதிலும் பாதுகாப்பான உலகம்.

உலகிலேயே உயர்வான அன்பு அம்மாவுடையதுதான்.

வீடு கோவில் ஆவது தாயால்.

தான் முட்டி போட்டு குழந்தையை நடக்கப் பழக்குபவள் தாய். அவள் முட்டி ஒடிந்த நேரத்தில் ‘முதியோர் இல்லமா?’

மனிதனுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசு தாய்.

தாய் என்ற ஒருவர் இருப்பதால்தான் கடவுள் நமபிக்கை என்ற ஒன்று இருக்கின்றது.

தாய் ஒரு தேவதை என்பார்கள். இது சரியாகாது. தேவதை அம்மா போல் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்யுமா என்ன?

அம்மா கடவுளைப் போல் என்பார்கள். கடவுள் கூட பல சமயங்களில் மனிதனை சோதனை செய்யும். ஆனால் அம்மா பிள்ளைக்காக எல்லா சோதனைகளையும் தான் ஏற்பாள். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என சொல்லி தாயையே முதன்மைப் படுத்தியுள்ளனர்.201607130917159323 world powerful person is mother SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button