கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடங்கள்

கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடங்கள்
கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மன ரீதியாக, உடல் ரீதியாக இவர்கள் நிறைய கஷ்டங்களை எதிர்க்கொள்கின்றனர். உணவு உட்கொள்வதில் இருந்து அது செரிமானம் ஆவதில், மலமிளக்க பிரச்சனை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவது என ஓர் பட்டியலே இருக்கிறது.

முதல் மூன்று மாத சுழற்சியில் வாயுத்தொல்லை அதிகரிக்கும். இதனால் குடல் மற்றும் செரிமான செயற்திறன் குறைய ஆரம்பிக்கும். மேலும், கர்ப்பக் காலத்தில் நீங்கள் உண்ணும் வைட்டமின் மாத்திரைகள் காரணத்தினால் உடலில் வாயு அதிகரிக்கும். கர்ப்பம் தரித்த நாளில் இருந்து எல்லா நாட்களும் இந்த குமட்டல் தொல்லை இருக்கும். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். காலை, முதல் இரவு வரை இது அடிக்கடி வரும். சில சமயங்களில் இதன் காரணத்தால் மயக்கம் கூட வரலாம்.

மாதவிடாய் தடைப்படுவதற்கு முன்பே, கர்ப்பம் தரித்த பெண்களிடம் சிறுநீர் அதிகரிப்பது ஓர் அறிகுறியாக தென்படும். இது, கர்ப்பக் காலம் முழுவதும் தொடரும். உடலில் பல ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் தான் இதற்கு காரணம் ஆகும்.

காலை எழுந்ததும் உடல்நலக் குறைபாடு, குமட்டல் ஏற்படுவதோடு, எச்சில் அதிகமாக சுரப்பதும் கூட கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் வெளிப்படும் ஓர் தர்மசங்கடமான அறிகுறி ஆகும். இது முதல் மூன்று மாத சுழற்சியின் போது தான் அதிகமாக இருக்கும். இரண்டாம் மூன்று மாத சுழற்சி ஆரம்பிக்கும் போது குறைந்துவிடும்.

காரணமே இல்லாமல் உடலில் ஆங்காங்கே அரிக்கும். முக்கியமாக வயிறு மற்றும் மார்பக பகுதிகளில் அரிக்கும். இது கர்ப்பிணி பெண்களுக்கு நேரிடும் மிகப்பெரிய தர்மசங்கடமான விஷயமாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகரிப்பதன் காரணத்தாலும் கூட இது ஏற்படலாம்.201607161308537872 dilemma women face during pregnancy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button