தலைமுடி சிகிச்சை

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்

மற்ற கூந்தல்களை விட சுருள் முடியை பராமரிப்பது மிகவும் கடினம். இதை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம்
சுருள் முடி இருப்பவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிக சிரமமுண்டு. அடிக்கடி சிக்கல் விழுந்துவிடும். வேகமாக வறண்டு விடும். நுனிபிளவு அதிகமாக ஏற்படும். அடர்த்தியாக காணப்பட்டாலும், தலைமுடிக்கு இந்த ஹேர் ஸ்டைலும் ஒத்து வராது. இப்போது சுருள் முடியை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

* சுருள் முடி இருப்பவர்கள் செய்யும் தவறு எந்தவிதமான ஷாம்புவும் உபயோகப்படுத்துவதுதான். நீங்கள் வறண்ட கூந்தலுக்கான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இதனால் கூந்தல் வறட்சியை தடுக்க முடியும்.

* ருள் முடி இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்கக் கூடாது. இதனால் கூந்தல் சீக்கிரம் வெடித்துவிடும். வாரம் மூன்று அல்லது இருமுறை தரைக்கு குளித்தால் போதுமானது.

* சிலருக்கு சுருள் முடி அடர்த்தியாக இருக்கும். இதனால் பிடிக்கு அடங்காமல், பம்மென்று இருக்கும். இவர்கள் தலைக்கு அலங்காரம் செய்வதற்கு முன், சிலிக்கான் சீரம் தலையில் கூந்தலில் தடவினால், கூந்தல் அடங்கும். நீளமாக தெரியும். இதனால் உங்கள் விருப்பப்படி சிகை அலங்காரங்கள் செய்யலாம். ஆனால் சிலிக்கான் சீரத்தை ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* குளிர்ந்த நீரில்தான் தலையை அலச வேண்டும். சுடு நீரில் அலசக் கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவறு. கூந்தலுக்கு உயிர் கிடையாது. அதற்கு குளிர்ந்த நீர் மற்றும் சுடு நீர் இரண்டும் ஒன்றுதான். பெரிய மாற்றங்கள் வராது.201607161214042750 how care curly hair SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button