சைவம்

சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்பு

மோர் குழம்பில் உருளைக்கிழங்கை போட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இபோது உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்பு
தேவையான பொருட்கள் :

தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
தண்ணீர் – ¼ கப்
உருளைக்கிழங்கு – 4
தயிர் – 1½ கோப்பை
கொத்தமல்லை தழை – சிறிதளவு
துருவிய தேங்காய் – ¼ கப்
உப்பு – சுவைக்கு

தாளிக்க :

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஓமம் – ½ தேக்கரண்டி

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடுகு, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.201607150928108846 how to make potato mor kuzhambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button