ஆரோக்கிய உணவு

கோதுமையால் தீவிர வாய்வுத் தொல்லையும், வயிற்று வலியும் ஏற்படுமா?

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு கோதுமையினால் தீவிர வாய்வும். வயிற்று வலியும் ஏற்படாது. கோதுமை அடங்கியுள்ள உணவை உட்கொண்ட பிறகு உங்களுக்கு வாய்வு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டால், உங்களுக்கு கோதுமை என்றால் அலர்ஜியாக இருக்கலாம்.

நீங்கள் இந்த நிலையால் அவதிப்பட்டீர்கள் என்றால், க்ளுடென் உட்பட கோதுமை புரதம் அடங்கிய உணவை உண்ணும் போது உங்களுக்கு வயிற்று வலியும் வயிற்று போக்கும் ஏற்புடம். பிரட், பாஸ்தா, பிட்சா மற்றும் சுட வைத்த உணவுகள் போன்ற பொதுவான உணவுகள் தான் இந்த நிலைக்கான அறிகுறிகளை காட்டும்.

காரணம்

உடற்குழி நோயால் (Celiac Disease) பாதிக்கப்பட்டவர்களுக்கு கோதுமையில் உள்ள புரதமான க்ளுடென் மீது தீவிர எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தும். உடற்குழி நோயின் காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என்றாலும் கூட, அதனால் ஏற்படும் பாதிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு உடற்குழி நோய் இருந்தால், நீங்கள் கோதுமை உணவுகளை உண்ணும் போது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் குடலின் நூல் போன்ற சிறிய உட்பூச்சை தாக்கும். இதனால் நீங்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் அவதிப்படலாம். அதற்கு காரணம் உங்கள் செரிமான அமைப்பு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை நிறுத்திவிடும். பொதுவாக ஐரோப்பா வகையை சார்ந்தவர்களிடம் இதனை பெரும்பாலும் காணலாம். வாழ்க்கையின் எந்த ஒரு நேரத்திலும் இது ஏற்படலாம். குறிப்பிட்ட சில வயதினருக்கு இது பொதுவாக ஏற்படுவதில்லை என்றாலும் கூட பெண்களுக்கு இது பொதுவாக ஏற்படும்.

அறிகுறிகள்

கோதுமை உணவுகளை உட்கொண்ட 20-30 நிமிடங்களில் உடற்குழி நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும். இது ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கோதுமை பொருட்களை உட்கொண்ட பிறகு வெறும் வயிற்று வலியும், வாய்வும் மட்டும் ஏற்படலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளும் தென்படும். வாந்தி, மலச்சிக்கல், உடல் எடை குறைவு, வெளிரிய நிறத்திலான மலம், மன அழுத்தம், பதற்றம், கீல்வாதம், எலும்பு வலி, சரும அரிப்பு, சோர்வு அல்லது இரத்த சோகை போன்றவைகள் இதற்கான பிற அறிகுறிகளாகும்.

அலர்ஜி பரிசீலனை

செரிமான சிக்கல் போக, மற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு கோதுமை அலர்ஜி இருக்கலாம். கோதுமை அலர்ஜியும் க்ளுடென் சகிப்பின்மையும் வேறு வேறு ஆகும். அதற்கு காரணம் க்ளுடென் மட்டுமல்லாது கோதுமை பொருட்களில் உள்ள மற்ற பிற புரதங்களினால் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு சந்திக்கும் அதிகமான எதிர்வினையாகும். அலர்ஜி வரும் போது உங்கள் சுவாச அமைப்பும், சருமமும் பாதிக்கப்படலாம். தீவிர வாய்வும், வயிற்று வலியும் கோதுமை அலர்ஜிக்கான பொதுவான அறிகுறிகளாகும். இதுப்போக சுவாச கோளாறு, மூச்சுத்திணறல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், படை நோய், தோல் அழற்சி அல்லது பொதுவான சரும அழற்சி போன்ற அறிகுறிகளையும் பெறலாம்.

சிகிச்சை

இந்த இரண்டு நிலைக்குமே சிறந்த சிகிச்சையாக விளங்குவது, உங்கள் உணவில் உள்ள அனைத்து கோதுமை மற்றும் க்ளுடென்னை நீக்குவது தான். மிட்டாய், சுவையூட்டும் பொருட்கள் மற்றும் ஐஸ் கிரீம்களில் கூட கோதுமை இருக்கலாம். அதனால் நீங்கள் வாங்கும் பொருட்களின் லேபில்லை தவறாமல் படிக்கவும். அதில் "க்ளுடென் ஃப்ரீ" என உள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு, சோயா மாவு அல்லது சோள மாவு போன்ற க்ளுடென் இல்லாத மாற்று மாவுகளை பயன்படுத்துங்கள்.

25 1435206330 4 cornstarch

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button