சிற்றுண்டி வகைகள்

மினி பொடி இட்லி செய்வது எப்படி

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இந்த மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மினி பொடி இட்லி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 2 கப்,
இட்லி மிளகாய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன்.
201607210903525997 how to make mini podi idli SECVPF
தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

0CB97FDB AE5B 44E8 BE3E D6FCFF0E5659 L styvpf

செய்முறை:

* இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்த பின் அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

* பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்கி பரிமாறுங்கள்.

* சுவையான மினி பொடி இட்லி ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button