இளமையாக இருக்க

என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள, இதப்படிங்க!

சிலரை பார்க்கும்போது அவர்களின் வயதினை நிச்சயம் கண்டு பிடிக்க முடியாது. வெறும் மேக்கப்பினால் மட்டும் இது சாத்தியப்பட்டிருக்காது . பின் எதுவாக இருக்கும்?

நீங்கள் நினைப்பது சரி. உணவுதான்.எந்த விதமான உணவுகள் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். நீங்களும் அடுத்தவர் பொறாமைப்படும்படி என்றும் பதினாறாகவே இருக்க வெண்டும் என்று ஆசைப்பட்டால் மேலே படிக்க தொடருங்கள்.

சருமம் இளமையாக இருக்க காரணம் என்ன? சருமம் இளமையாக இருக்க நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது சில டெக்னிக்குகள்தான். உடலிலுள்ள விட்டமின், மினரல், முக்கியமாக அமினோ அமிலங்கள் தனித்தனி சத்துக்களாக பிரிந்து அவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அதற்கான பலத்தை தருகின்றன.

பதினாறு ப்ளஸ்களில் கொலாஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவைகள்தான் சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை கொடுத்து சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றன.

தோலிற்கடியில் மிருதுதன்மையை கொடுத்து சருமத்தை மெத்தென்று ஆக்குகிறது.அதனால்தான் அந்த வயதுகளில் சருமம் மிக அழகாக பொலிவாக இருக்கும்.

வயது ஆக ஆக கொலாஜன் உற்பத்தி குறையும். இதனால் சருமத்தில் இறுக்கம் அதிகரித்து தோலுக்கடியில் இருக்கும் குஷன் போன்ற மிருதுவான தன்மை இழந்துவிடுகிறோம்.

ஆகவே நாம் புரோட்டின் மற்றும் நார்சத்து கொண்ட உணவுகளை உண்ணும்போது அவை கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்குகின்றன. சருமமும் வறட்சி குறையாமல் இருக்கும்.

இப்போது தெரிந்ததா ஏன் சிலர் எப்போதும் இளமையாகவே இருக்கிறார்கள் என்று. வெறும் அகத்தினால் மட்டும் நிரந்தரமான அழகைப் பெற்றிட முடியாது. ஆரோக்கியமான உணவும் வேண்டும்.

என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

பெர்ரி பழங்கள் : பெர்ரி பழங்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகளைக் கொண்டுள்ளன. நார்சத்தும் இவைகளில் அதிகமாக கானப்படுகின்றன.

தினமும் பெர்ரி பழங்கள் உண்டால் நச்சுக்கள் வெளியேறி, சருமம் கிளியராக இருக்கும். கண்ட ஜங்க் உணவுகளை உன்ணாமல் பெர்ரி பழங்கள் சாப்பிடுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.

நட்ஸ் : நட்ஸ் அற்புதமான ஸ்நாக்ஸ் உணவாகும்.முந்தரி மற்றும் பூசணிக்காய் விதைகளில் தேவையான மினரல்கள் உள்ளன. செலினியம் மிக அற்புதமான ஆன்டி ஆக்ஸிடென்ட். அது விட்டமின் ஈ யுடன் சேர்ந்து கேன்ஸர் செல்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது.

இவை அனைத்தும் எல்லா வகையான நட்ஸ்களில் உள்ளன. மாலையில் கொறிக்க நட்ஸ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒட்டிய கன்னங்கள் கொண்ட வறட்சியான சருமம் நீங்கள் கொண்டிருந்தால், உங்கள் சருமத்தில் மிருதுதன்மை நாளடைவில் அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

நீர்: எங்கும் எப்போது எளிதில் கிடைக்கக் கூடியது நீர்தான். தவறாமல் நீர் குடிக்கும் பழக்கத்தை எற்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயம் நாம் நீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். தாகம் வந்தால் தவிர நீரினை கண்களால் கூட பார்ப்பதில்லை. இது மிகவும் தவறு.

தாகம் வரும்வரை நீங்கள் விட்டிருந்தால், போதிய அளவு நீர்சத்து உங்கள் உடலில் இல்லை என்பதுதான் அர்த்தம். ஆகவே தாகம் வரும் வரை விடாதீர்கள். நச்சுக்க்களும் வேண்டாத கழிவுகளும் வெளியேற நீங்கள் நீர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.

சிவப்பு திராட்சை : சிவப்பு திராட்சையில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இந்த சிவப்பு திராட்சைக்கு உள்ளது. விட்டமின் சி யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்டை விட இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகம் உள்ளது.

அதேபோல் விட்டமின் ஈ யில் உள்ளதை விட 20 மடங்கு அதிகம் உள்ளது. தினமும் என்று இல்லாமல் வாரம் ஒரு தடவையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலே கீரை : காலே கீரை மிக மிகாற்புதமான பலன்களைக் கொண்டுள்ளது. வாரம் மூன்று முறையாவது உணவிலோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள்.

அவ்வளவு அற்புதத்தை இந்த கீரை தரும். சருமத்த்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்து சரிபடுத்தி விடும். ஒரு புஷ்டியான தோற்றத்தை கொடுத்து இளமையாக தோன்ற வைக்கும்.

அவகேடோ : அவகேடோவில் அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்டும் உள்ளது. கொழுப்பினைக் கட்டுபடுத்தும். விட்டமின் ஈ அதிகம் உள்ளது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்இதனை தொடர்ச்சியாக உண்ணும்போது இளமையான தோற்றத்தை பெறுவது உறுதி. Post Comment

6 18 1463553857

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button